IPL வீரர்கள் ஏலம் 2022ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில்

274

2022ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் மெகா வீரர்கள் ஏலம் அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதம் 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் பெங்களூரில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக டொம் லேதம்

மெகா வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதியானது இன்னும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் (BCCI) உறுதி செய்யப்படாத போதும், இந்தியாவின் செய்திச் சேவையான Cricbuzz செய்தி நிறுவனம் ஏலம் நடைபெறும் திகதி பற்றி 2022ஆம் ஆண்டுக்கான IPL தொடரில் பங்கெடுக்கும் அணிகளின் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றது.

IPL மெகா ஏலம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது எனக் குறிப்பிடப்பட்டிருப்பதனால் இந்த வீரர்கள் ஏலத்தில் குறைந்தது 1,000 இற்கு மேற்பட்ட வீரர்கள் பங்கெடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு அதில் இருந்து 200 தொடக்கம் 250 வரையிலான வீரர்கள் அணிகளினால் கொள்வனவு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மறுமுனையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, IPL தொடரில் பங்கெடுக்கும் சர்வதேச கிரிக்கெட் சபைகளுக்கும், மாநில கிரிக்கெட் சபைகளுக்கும் மெகா ஏலத்தில் பங்கெடுக்கவுள்ள வீரர்களின் பெயர்ப்பட்டியலை அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மீண்டும் நடைபெறவுள்ள லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர்

2022ஆம் ஆண்டுக்கான IPL ஏலத்தில் லக்னோவ், அஹமதாபாத் என்னும் இரண்டு புதிய அணிகள் உள்ளடங்கலாக மொத்தம் 10 அணிகள் பங்கெடுக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<