IPL 2025 முதல் போட்டியில் கொல்கத்தா – பெங்களூர் அணிகள்

IPL 2025

11
IPL 2025

2025ஆம் ஆண்டின் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் முதல் போட்டி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

>>RCB அணிக்கு புதிய தலைவர் நியமனம்!<<

தொடரின் நடப்புச் சம்பியன்களான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், IPL புதிய பருவத்திற்கான முதல் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் வீரர்களினை மார்ச் 22ஆம் திகதி தமது சொந்த மைதானத்தில் (கொல்கத்தாவில்) வைத்து எதிர்கொள்ளவிருக்கின்றது 

மறுமுனையில் கடந்த ஆண்டு தொடரில் இரண்டாம் இடம்பெற்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் இம்முறை IPL தொடரில் தமது முதல் போட்டியினை தமது சொந்த மைதானத்தில் வைத்து ஆரம்பிக்கின்றது. இந்தப் போட்டி மார்ச் 23ஆம் திகதி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் நடைபெறுகின்றது 

2025ஆம் ஆண்டு IPL தொடரின் முழு போட்டி அட்டவணை முழுமையாக இன்னும் வெளியிடப்படாது போயினும் கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், தொடரில் பங்கெடுக்கும் அணிகளுக்கு தங்களது போட்டிகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது 

மறுமுனையில் தொடரின் இறுதிப் போட்டி மே மாதம் 25ஆம் திகதி கொல்கத்தாவில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. அதேநேரம் இன்னும் ஓரிரு தினங்களில் IPL 2025 தொடரின் முழு அட்டவணை வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<