2024ஆம் ஆண்டு IPL நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

589

2024ஆம் ஆண்டின் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடர் ஆரம்பமாகும் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

ஆறுதல் வெற்றியுடன் இலங்கை தொடரை நிறைவு செய்த ஆப்கான்

இந்த ஆண்டு IPL T20 தொடரின் 17ஆவது பருவத்திற்கான போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் தொடர் ஆரம்பமாகும் திகதியாக மார்ச் 22 அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 2024ஆம் ஆண்டுக்கான IPL T20 தொடர் சென்னையில் நடைபெறும் என IPL தொடர் நிர்வாக தலைவர் அருண் சிங் துமால் இந்தியச் செய்திச் சேவையான Cricbuzz இடம் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதேவேளை இம்முறை IPL தொடருக்காக ஆரம்ப நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சென்னை சுபர் கிங்ஸ் அணியின் நிர்வாக தலைவர் காசி விஸ்வநாதன் கூறியிருக்கின்றார். எனினும் தொடரின் முதல் போட்டியில் தொடரின் நடப்புச் சம்பியன் சென்னை சுபர் கிங்ஸ் உடன் ஆடும் அணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடர் அணிக்குழாம்கள் வெளியீடு

மறுமுனையில் IPL தொடரின் போட்டி அட்டவணை மிக விரைவில் வெளியிடப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. அதேவேளை இந்த ஆண்டுக்கான IPL தொடர் மே மாதம் 26ஆம் திகதி நிறைவுக்கு வரும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<