சோல்டின் அதிரடியில் டெல்லி அணிக்கு நான்காவது வெற்றி

160

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை, டெல்லி கெபிடல்ஸ் 07 விக்கெட்டுக்களால் வீழ்த்தி அதிரடி வெற்றியைப் பெற்றிருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் IPL தொடரின் இந்தப் பருவத்தில் டெல்லி அணியானது தம்முடைய நான்காவது வெற்றியையும் பதிவு செய்து கொள்கின்றது.

மதீஷவின் அற்புத பந்துவீச்சுடன் மும்பையை வீழ்த்தியது சென்னை

றோயல் செலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் அணிகள் இடையிலான IPL மோதல் நேற்று (06) டெல்லியில் ஆரம்பமாகியது.  போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற றோயல் செலஞ்சர்ஸ் அணி வீரர்கள் முதலில் துடுப்பாடும் வாய்ப்பினை தமக்காகப் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய றோயல் செலஞ்சர்ஸ் அணி விராட் கோலி, மஹிபால் லொம்ரோர் ஆகியோரது அரைச்சதங்களோடு 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்கள் எடுத்தது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் விராட் கோலி 46 பந்துகளை எதிர் கொண்டு 5 பெளண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்கள் எடுக்க, லொம்ரோர் 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மறுமுனையில் டெல்லி அணியின் பந்துவீச்சில் மிச்சல் மார்ஷ் 02 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 182 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய டெல்லி கெபிடல்ஸ் அணி வெற்றி இலக்கினை 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 187 ஓட்டங்களுடன் அடைந்து கொண்டது.

சுழல் வீரர்களுடன் இலகு வெற்றியினைப் பதிவு செய்த குஜராத் டைடன்ஸ்

டெல்லி கெபிடல்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் பிலிப் சோல்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 87 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

மறுமுனையில் றோயல் செலஞ்சர்ஸ் பந்துவீச்சில் ஜோஸ் ஹேசல்வூட், கர்ண் சர்மா மற்றும் ஹர்ஷால் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்த போதும் அது வீணாகியிருந்தது. போட்டியின் ஆட்டநாயகன் விருதினை டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய பிலிப் சோல்ட் பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – 181/4 (20) விராட் கோலி 55(46), மஹிபால் லொம்ரோர் 54(29)*, மிச்சல் மார்ஷ் 21/2(3)

டெல்லி கெபிடல்ஸ் – 187/3 (16.4) பிலிப் சோல்ட் 87(45)

முடிவு – டெல்லி கெபிடல்ஸ் 07 விக்கெட்டுக்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<