போராடி தோல்வியினைத் தழுவிய சென்னை சுபர் கிங்ஸ்

185

இந்தியன் பிரீமியர் லீக் 2023 (IPL) தொடரின் 17ஆவது லீக் போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் அணியினை ராஜஸ்தான் றோயல்ஸ் 3 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.

>> ஆவேஸ் கானுக்கு எதிராக BCCI ஒழுக்காற்று நடவடிக்கை

மேலும் இந்த வெற்றியுடன் தாம் இந்தப் பருவத்தில் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றியினைப் பதிவு செய்துள்ள ராஜஸ்தான் றோயல்ஸ், IPL புள்ளிகள் பட்டியலிலும் முதல் இடத்தினைப் பெற்றிருக்கின்றது.

ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் சென்னை சுபர் கிங்ஸ் அணிகள் இடையிலான IPL போட்டியானது நேற்று (12) சென்னை சேப்பாக்கம் அரங்கில் ஆரம்பமாகியது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுபர் கிங்ஸ் தலைவர் MS. டோனி முதலில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியினை துடுப்பாட பணித்திருத்தார். அதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்தது.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்பவீரராக வந்திருந்த ஜோஸ் பட்லர் அரைச்சதம் விளாசினர். அந்தவகையில் பட்லர் 36 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 52 ஓட்டங்கள் எடுக்க, டேவ்தட் படிக்கல் 26 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்கள் பெற்றார்.

மறுமுனையில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் ஆகாஷ் சிங், துஷார் தேஷ்பாண்டே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் எடுத்தனர்.

>> 2023 ஐ.பி.எல். தொடரில் முதல் வெற்றியினைப் பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ்

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 176 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய சென்னை சுபர் கிங்ஸ் அணியானது வெற்றிக்காக இறுதி ஓவர் வரை போராடிய போதும் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வி அடைந்தது.

சென்னை சுபர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் டெவோன் கொன்வெ 38 பந்துகளுக்கு 6 பௌண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுக்க, இறுதிவரை வெற்றிக்காக போராடிய சென்னை சுபர் கிங்ஸ் அணித்தலைவர் MS. டோனி ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரியுடன் 32 ஓட்டங்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் றோயல்ஸ் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

ராஜஸ்தான் றோயல்ஸ் – 175/8 (20) ஜோஸ் பட்லர் 52(36), டேவ்தட் படிக்கல் 38(26), ரவீந்திர ஜடேஜா 21/2(4), துஷார் தேஷ்பாண்டே 37/2(4), ஆகாஷ் சிங் 40/2(4)

சென்னை சுபர் கிங்ஸ் – 172/6 (20) டேவோன் கொன்வெய் 50(38), MS. டோனி 50(38)*, ரவிச்சந்திரன் அஸ்வின் 25/2(4), யுஸ்வேந்திர சாஹல் 27/2(4)

முடிவு – ராஜஸ்தான் றோயல்ஸ் 6 விக்கெட்டுக்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<