விராத் கோஹ்லிக்கு அபராதம் விதித்த ஐ.பி.எல் நிர்வாகம்

Indian Premier League - 2021

204

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய லீக் போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு 12 இலட்சம் ரூபா அபாரதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற .பி.எல் போட்டியில் ரவிந்த்ர ஜடேஜாவின் சகலதுறை ஆட்டம், பாப் டூ ப்ளெசிஸின் அபார துடுப்பாட்டம், இம்ரான் தாஹிரின் துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றின் உதவியுடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 69 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

>> கோஹ்லி, சர்மாவை தொடர்ந்து மோர்கனுக்கு 12 இலட்சம் அபராதம்

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் சென்னை அணி மீண்டும் முதலாம் இடத்துக்கு முன்னேறியது.

அத்துடன், தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளை ஈட்டிவந்த பெங்களூர் அணி இவ்வருட ஐபிஎல் தொடரில் முதல் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் .பி.எல் நிர்வாகத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

.பி.எல் விதிமுறைகளின் படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை ஒவ்வொரு அணியும் 90 நிமிடங்களுக்குள் வீசி முடிக்க வேண்டும், ஆனால் பெங்களூர் அணி நேற்றைய போட்டியில் 90 நிமிடங்களுக்குள் பந்துவீசி முடிக்காததன் காரணமாகவே விராட் கோஹ்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

>> IPL இல் புதிய வரலாறு படைத்தார் விராத் கோஹ்லி

அதேபோல, எதிர்வரும் போட்டிகளில் பெங்களூர் அணி தாமதமாக பந்துவீசினால் விராட் கோஹ்லியை ஒரு போட்டியில் இருந்து தடை செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி, மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவர் ரோஹித் சர்மா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இயென் மோர்கன் ஆகியோர் மீது இதே தவறுக்காக தலா ரூ.12 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<