இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் 13ஆவது பருவம் பல்வேறு சிக்கல்களையும், சவால்களையும் தாண்டி விறுவிறுப்பு, பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் கடந்த வாரம் நிறைவுக்கு வந்தது.
பௌண்டரி எல்லையில் வைத்து பந்துகளை உயரப் பாய்ந்து லாவகமாக தடுக்கும் அபார களத்தடுப்பு, ஒரே போட்டியில் இரண்டு சுப்பர் ஓவர் போன்ற சில ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளும் இம்முறை ஐ.பி.எல் தொடரில் அரங்கேறின.
IPL தொடரில் துடுப்பாட்டத்தில் ஜொலித்தவர்கள்
இம்முறை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட்…
அதேபோல, அணி உரிமையாளர்கள் தலையில் இடியைத் தூக்கிப் போடும் அளவிற்கு சில தரமான சம்பவங்களும் நடைபெற்றன. எதுஎவ்வாறாயினும், ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக நடத்தப்படும் ஐ.பி.எல் T20 தொடர் இந்த வருடமும் ஒரு வழியாக நடைபெற்று முடிந்தது.
இம்முறை ஐ.பி.எல் தொடரில் முதலாவது லீக் போட்டியில் வெற்றியீட்டிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தான் முதல் அணியாக ப்ளே ஓஃப் சுற்றில் இருந்து வெளியேறது.
மறுபுறத்தில், ஐ.பி.எல் தொடரின் மற்றொரு ஜாம்பவனான மும்பை இந்தியன்ஸ் அணியோ அசால்டாக சம்பியன் பட்டத்தை 5ஆவது தடவையாக தட்டித் தூக்கியது.
வழக்கத்திற்கு மாறாக இந்த தொடரில் இளம் வீரர்கள் பலருக்கு ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு வாய்ப்பு வழங்கினாலும், கடந்த தொடர்களில் அபாரமாக விளையாடி, கோடிக் கணக்கில் மறுபடியும் ஒப்பந்தம் செய்யப்பட்ட முன்னணி வீரர்கள் பலர் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல் தவித்தனர்.
அதிலும் குறிப்பாக, இந்திய வீரர்களைப் போல, ஒருசில முன்னணி வெளிநாட்டு வீரர்களுக்கும் இம்முறை ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியிலாவது விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே, இம்முறை ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் கூட வாய்ப்புக் கிடைக்காத வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
கிறிஸ் லின் (மும்பை இந்தியன்ஸ்)
கடந்த ஐ.பி.எல் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடிய கிறிஸ் லின்னை இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.
இம்முறை ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டி கொக், தான் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் அபாரமாக விளையாடியதால் கடைசி வரை கிரிஸ் லின்னிற்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இது கிறிஸ் லின்னுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.
ஐ.பி.எல் தொடரில் டெக்கான் சார்ஜஸ் அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட கிறிஸ் லின் 2014இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
IPL தொடரில் பந்துவீச்சில் மிரட்டிய வீரர்கள்
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) T20 கிரிக்கெட் தொடரின் 13வது பருவம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது…
இறுதியாக 2019இல் கொல்கத்தா அணிக்காக 13 போட்டிகளில் விளையாடிய அவர், 405 ஓட்டங்களைக் குவித்தார். எனினும், இவ்வருடம் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2 இலட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், எந்தவொரு போட்டியிலும் விளையாடாமல் ஏமாற்றத்துடன் நாடு திரும்பினார்.
பார்த்தீவ் பட்டேல் (ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்)
கடந்த ஐ.பி.எல் தொடர்களில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அபாரமாக விளையாடிய பார்த்தீவ் பட்டேலுக்கு இம்முறை ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை.
இம்முறை ஐ.பி.எல் தொடரில் அந்த அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தேவ்துட் படிக்கல் ஒவ்வொரு போட்டியிலும் ஓட்டங்களைக் குவித்த காரணத்தால் பார்த்தீவ் பட்டேல்லின் பங்களிப்பு பெங்களூர் அணிக்கு தேவைப்படவில்லை.
ஐ.பி.எல் தொடரில் ஆறு அணிகளுக்காக விளையாடியுள்ள பார்த்தீவ் பட்டேல், இறுதியாக 2019 பருவம் 14 போட்டிகளில் விளையாடி 373 ஓட்டங்களைக் குவித்தார்.
அங்குரார்ப்பண ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இவர், அந்த அணிக்காக தொடர்ச்சியாக 3 பருவங்களில் விளையாடினார். பிறகு கொச்சி டஸ்கர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியிருந்தார்.
Video – மஹேலவின் தலைமையில் சாதித்த மும்பை இந்தியன்ஸ் | Cricket Galatta Epi 45
நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடர் நடைபெறவிருக்கும் எல்.பி.எல். தொடரில் ஏற்பட்டுள்ள…
இந்த நிலையில் 2015இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 2018இல் 1.7 கோடிக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டேவிட் மில்லர் (ராஜஸ்தான் ரோயல்ஸ்)
இம்முறை ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிய டேவிட் மில்லர், சென்னை அணிக்கெதிரான முதலாவது லீக் போட்டியில் களிமிறங்கியிருந்தார். எனினும், அந்தப் போட்டியில் டக்அவுட் ஆன டேவிட் மில்லருக்கு, அதன்பிறகு எந்தவொரு போட்டியிலும் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதிலும் குறிப்பாக, இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் டொம் கரண் ஆகிய வீரர்கள் அணிக்கு திரும்பிய பிறகு அவரால் மீண்டும் அந்த அணிக்காக விளையாட முடியவில்லை.
2013இல் 3ஆவது அதிவேக ஐ.பி.எல் சதம் அடித்த அவர், அந்த பருவத்தில் அரைச்சதங்களுடன் 418 ஓட்டங்களைக் குவித்தார். எதுஎவ்வாறாயினும், 2018இல் மோசமாக விளையாடிய காரணத்தால் டேவிட் மில்லரை பஞ்சாப் அணி விடுவித்தது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி 75 இலட்சத்துக்கு ஒப்பந்தம் செய்தது.
பவன் நேகி (ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்)
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அனியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த பவன் நேகியும் இம்முறை ஐ.பி.எல் தொடரில் எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை.
Video – சுழல் நாயகன் வருண் சக்ரவர்த்தியின் போராட்டப் பயணம்..!
இம்முறை ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி அசத்திய தமிழக வீரர்…
அந்த அணியில் வொசிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹல் ஆகிய இருவரும் தாம் விளையாடிய அனைத்துப் போட்டியிலும் சிறந்த பங்களிப்பை வழங்கியதால் பவன் நேகிக்கு கடைசி வரை பெங்களூர் அணிக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
2016இல் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட பவன் நேகி, 2016இல் டெல்லி டெயார்டெவில்ஸ் அணிக்காக 8.5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து 2018இல் மீண்டும் டெல்லி அணிக்காக ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர், மீண்டும் 2019இல் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டார்.
எனினும், கடந்த முறை ஐ.பி.எல் தொடரில் ஏழு போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுக்களை மாத்திரம் அவர் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மிட்செல் மெக்லெனகன் (மும்பை இந்தியன்ஸ்)
கடந்த தொடர்களில் எதிரணிகளை மிரளவிட்ட மும்பை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான மிட்செல் மெக்லெனகன்னுக்கும் இம்முறை ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கான வாய்ப்ப்பு கிடைக்கவில்லை.
கண்டி டஸ்கர்ஸ் அணியில் இந்திய – பாகிஸ்தான் வேகப்பந்து ஜோடி
லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் ஆடும் அணிகளில் ஒன்றான கண்டி டஸ்கர்ஸ், தமது குழாத்தில் பிரதியீட்…
இம்முறை ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, ஜேம்ஸ் பாட்டின்சன் மற்றும் நேதன் கோல்டர் நைல் ஆகியோர் வேகப் பந்துவீச்சில் அந்த அணிக்காக சிறப்பாக விளையாடியதால் மெக்லெனகனின் தேவை மும்பை அணிக்கு ஏற்படவில்லை.
2013இல் முதல்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர், 2015 மற்றும் 2017 பருவங்களில் முறையே 18, 19 விக்கெட்டுக்களை எடுத்து அசத்தினார்.
2018 ஐ.பி.எல் ஏலத்தில் எந்தவொரு அணியாலும் இவர் வாங்கப்படவில்லை. எனினும், ஜேசன் பஹ்ரென்டோர்ப் உபாதைக்குள்ளாகியதால் அவர் மீண்டும் மும்பை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இந்த நிலையில், 2019 பருவத்தில் 5 போட்டிகளில் விளையாடிய அவருக்கு 3 விக்கெட்டுக்களை மாத்திரமே கைப்பற்ற முடிந்தது.
மணன் வோஹ்ரா (ராஜஸ்தான் ரோயல்ஸ்)
பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது எதிரணிகளை மிரளவிட்ட 27 வயதுடைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மனன் வோஹ்ராவை கடந்த வருடம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
இவருக்கும் இம்முறை ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
2013இல் பஞ்சாப் அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டு 2014இல் அபாரமாக விளையாடி அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்ட வலதுகை துடுப்பாட்ட வீரரான இவர், ரொபின் உத்தப்பாவுடன் சேர்ந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் களமிறங்கியிருந்தார்.
Video – கிரிக்கெட்டில் சாதிக்க தன்னம்பிக்கை வேண்டும் – PRAKASH SCHAFFTER
முன்னாள் கிரிக்கெட் வீரரும், இலங்கையின் முன்னணி தொழில் அதிபருமாக பிரகாஷ் ஷாப்டர்…
அத்துடன், அந்த பருவத்தில் போட்டிகளில் விளையாடி 324 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
இதனிடையே, 2018இல் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர், 2019இல் 20 இலட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதுவரை 49 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள மணன் வோஹ்ரா, 3 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 1012 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
சந்தீப் லமிட்சேன் (டெல்லி கெபிடல்ஸ்)
ஐ.பி.எல் அரங்கில் விளையாடிய முதல் நேபாளத்தைச் சேர்ந்த வீரரான சந்தீப் லமிட்சேனுக்கு இம்முறை ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்காக ஒரு போட்டியிலும் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாவதற்கு முன் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ஜமைக்கா தலவாஸ் அணிக்காக விளையாடிய அவர், 11 போட்டிகளில் 12 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
எனினும், இம்முறை ஐ.பி.எல் இல் முதல்தடவையாக இறுதிப் போட்டி வரை முன்னேறி வந்த டெல்லி அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.
IPL இல் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு சொதப்பிய வீரர்கள்
நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை…
அந்த அணியில் அஸ்வின், அக்ஷார் பட்டேல், அமித் மிஸ்ரா மற்றும் சந்தீப் துபே உள்ளிட்ட சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றதால் அவரால் எந்தவொரு போட்டியிலும் விளையாட முடியாமல் போய்விட்டது.
2018இல் முதல்தடவையாக டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர். 2019 பருவம் உள்ளடங்கலாக 9 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க