ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு வீரர்களது மற்றும் பயிற்சியாளர்களது மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தாரை அழைத்துச் செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அனுமதி வழங்கியுள்ளது.
இதனிடையே, ஐ.பி.எல். போட்டி ஆரம்பமாகிய ஒவ்வொரு 5 நாட்கள் இடைவெளியிலும் வீரர்களுக்கு தொடர்ந்து பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும் எனவும், உயிர் பாதுகாப்பு வளையத்தை விட்டு யாராவது வெளியேறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 19ஆம் திகதி ஐக்கிய அரபு இராட்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய ஐ.பி.எல் நிர்வாகிகள் குழுவினர், ஐ.பி.எல் குறித்த பல்வேறு நிலைப்பாடுகளை தெரிவித்தனர். ஆனால் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த விதிமுறைகள் வெளியிடப்படவில்லை.
ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடைபெறும் திகதியில் திடீர் மாற்றம்?
இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டியுடன் தொடர்புடையவர்கள் பின்பற்ற வேண்டிய கொவிட் – 19 தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை இந்திய கிரிக்கெட் சபை தயாரித்துள்ளது.
இதில் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஐக்கிய அரபு இராட்சியம் செல்வதற்கு முன்பாக இரண்டு முறை பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். அதில் ‘நெகட்டிவ்‘ என்ற முடிவு வந்தால் மட்டுமே ஐக்கிய அரபு இராட்சியத்திற்கு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன். யாருக்காவது கொவிட்– 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் தனிமைப்படுத்தல், அதன்பிறகு மேலும் இரண்டு முறை பி.சி.ஆர் பரிசோதனை போன்ற நடைமுறை அவர்களுக்கும் பொருந்தும்.
IPL நேரத்தில் மாற்றம்: மாற்று வீரர்களை களமிறக்கவும் அனுமதி
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த விதிமுறைகளில், சக அணி வீரர்களை சந்திக்க வேண்டுமென்றாலும், 3 தடவைகள் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கொவிட் – 19 வைரஸ் இல்லை என உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அணி வீரர்களின் உடல்நிலை குறித்த அறிக்கையை அளிக்க அணியின் மருத்துவ குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராட்சியத்திற்கு வருவதற்கு முன்பு இதை அளிக்கவும் கூறப்பட்டுள்ளது.
சிறிய பாதுகாப்பான இடங்களை அணி வீரர்களுக்கு அளிக்கவும் அணி நிர்வாகத்திற்கு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. ஹோட்டலில் தங்குமிடத்தை தேர்ந்தெடுத்தாலும் மையப்படுத்தப்பட்ட குளிரூட்டிய மண்டபங்களை தேர்ந்தெடுக்க கூறப்பட்டுள்ளது.
video – மாலிங்க, இசுரு IPL ஆடுவாங்களா?|Sports RoundUp – Epi 126
மேலும் வீரர்கள் தங்களது சொந்த ஜேர்சி உள்ளிட்ட ஆடைகளை எடுத்துவரவும், மைதானத்திலேயே அதை பாதுகாத்துக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வீரர்களுக்கு பொதுவான இடத்தில் உணவை சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களும் உடன் செல்லலாம். ஆனால், அவர்கள் அணி பேருந்தில் பயணிக்க முடியாது.
எப்போதும் ஒவ்வொரு அணி வீரர்களும் உடை மாற்றும் அறையில் தான் போட்டிக்கு முன்பும், பின்பும் குழுமி இருப்பார்கள். அது நெருக்கமான இடமாகவே இருக்கும்.
அதை தவிர்க்கும் வகையில் சமூக இடைவெளியை பின்பற்ற மைதானத்தின் வெற்றிடமாக உள்ள இடங்களில் உடை மாற்றும் அறையை வைத்துக் கொள்ள ஐ.பி.எல் அணிகளுக்கு பிசிசிஐ வலியுறுத்தி உள்ளது.
Video – இனியாவது தொடர்ந்து நடக்குமா LPL?? | Cricket Galatta Epi 31
அத்துடன், ஐ.பி.எல் போட்டிகளில் இரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் மைதானத்தில் பார்வையாளர்கள் அரங்கு வெற்றிடமாக இருக்கும். அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என பிசிசிஐ கூறியுள்ளது. அதேபோல, சில நவீன முறைகளையும் பின்பற்றுமாறு கூறி உள்ளது.
இதில் அணி வீரர்கள் பட்டியலை காகிதத்தில் வைத்துக் கொள்ளாமல், இலத்திரனியல் இயந்திரங்களில் பதிவிட்டு வைத்துக் கொள்ளுமாறும் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காற்றில் மிதக்கும் கொவிட் – 19 வைரஸை அழிக்கவும் பிசிசிஐ விதிமுறையில் அறிவுறுத்தி உள்ளது.
ஐ.பி.எல் அணிகள் மூடப்பட்ட இடங்களில் காற்றில் மிதக்கும் கொரோனா வைரஸை அழிக்கும் ஸ்காலின் ஹைப்பர்சார்ஜ் கொரோனா கேனன், (Scalene Hypercharge Corona Canon) அதாவது சுருக்கமாக ஷைகோ கேனான் என்று அழைக்கப்படும் கருவியை பயன்படுத்த வேண்டும் எனவும் பிசிசிஐ கூறியுள்ளது.
ஐ.பி.எல் தொடர் அனுசரணையிலிருந்து விலகும் விவோ நிறுவனம்
இதனிடையே, ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஐக்கிய அரபு இராட்சியம் சென்றதும் கொவிட் – 19 தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.
இந்த பாதுகாப்பு வளையத்தை விட்டு யாராவது வெளியேறினால் அவர்கள் மீது ஐ.பி.எல். நடத்தை விதிமுறைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் சபையின் வழிகாட்டுதல் நெறிமுறையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கவுள்ள 8 அணிகளுக்கும் தனித்தனி ஹோட்டல், எப்போதும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க