கொவிட் – 19 வைரஸிலிருந்து தப்பிய டோனி

230
Dhoni
IPL Twitter

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் – 19 வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் திட்டமிட்டபடி நடைபெறவுள்ள சென்னை அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்க அவர் இன்று (14) சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.பி.எல் தொடருக்கு மேலும் சில நிபந்தனைகள்

இந்த வருடத்துக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (.பி.எல்) கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.  

இதையொட்டி, சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திர வீரரும், அந்த அணியின் தவைருமான மகேந்திர சிங் டோனி, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (5) முதல் வலைப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் இன்று (14) ராஞ்சியில் இருந்து சென்னை வரவுள்ளார். 

தமது சென்னை பயணத்தை தொடங்கும் முன், ராஞ்சியில் உள்ள வீட்டில் இருந்தப்படி, டோனி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதில் டோனிக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திட்டமிட்டப்படி இன்று சென்னை வந்தடைவார் எனத் தெரிகிறது.

எனவே, கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு .பி.எல் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள டோனிக்கு, பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அதன் முடிவுக்காக காத்துக் கொண்டிருந்த இலட்சக்கணக்கான அவரது இரசிகர்கள், தற்போது வெளியாகியுள்ள கொவிட் – 19 வைரஸ் பரிசோதனை முடிவால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Video – LPL இல் களமிறங்கும் நட்சத்திரங்கள்|Sports RoundUp – Epi 127

இதுதவிர, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு, பியூஷ் சவ்லா உள்ளிட்ட வீரர்களும் இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள தனி விமானம் மூலம் வருனை தரவுள்ளனர்.

இதன்படி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி துபாய் நோக்கி பயணமாகவுள்ளனர்

இதேவேளை, 13ஆவது .பி.எல். கிரிக்கெட்டுக்காக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் கருண் நாயர் தன்னை தயார்படுத்தி வந்த நிலையில், கொவிட் – 19 வைரஸ் தொற்றினால் பாதிப்புக்குள்ளானார்

இதையடுத்து அவர் 2 வாரத்திற்கு மேலாக தனிமைப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு நடத்தப்பட்ட பி.சி.ர் பரிசோதனையில் அவர் முழுமையாக குணமடைந்து விட்டார்

கடந்த மாதம் அவர் கொவிட் – 19 வைரஸினால் பாதிக்கப்பட்ட போதிலும் இப்போது தான் அது பற்றிய விபரம் வெளியாகியுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கொவிட் – 19 பாதுகாப்பு நடைமுறையின்படி துபாய் நோக்கி புறப்படுவதற்கு முன்பாக அவர் இன்னும் 3 முறை பி.சி.ஆர் பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். பஞ்சாப் அணி வீரர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி துபாய் நோக்கி புறப்பட்டு செல்கிறார்கள்.

தலைவராக டோனியின் சாதனையை முறியடித்த இயன் மோர்கன்

இதன்படி, .பி.எல். போட்டியுடன் தொடர்புடையவர்களில் கொவிட் – 19 வைரஸினால் பாதிக்கப்பட்ட 2ஆவது நபர் கருண் நாயர் ஆவார்

முன்னதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, .பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள எட்டு அணி வீரர்கள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் குறைந்தபட்சம் நான்கு முறை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட பிறகு தான் இத்தொடரில் விளையாட முடியும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க