IPL தொடரில் பந்துவீச்சில் மிரட்டிய வீரர்கள்

237
BCCI

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) T20 கிரிக்கெட் தொடரின் 13வது பருவம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த தொடர்களை விட இந்த வருடத்திற்கான தொடர் பெரும் குழப்பமாகவும், ரசிகர்களின் விறுவிறுப்பு இல்லாமலுமே நடந்து முடிந்துள்ளது.

இதன் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கெபிடல்ஸ் அணியை வீழ்த்தி 5ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்றது

IPL இல் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு சொதப்பிய வீரர்கள்

இதுஇவ்வாறிருக்க, .பி.எல் தொடரில் இம்முறை மொத்தம் 668 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன. அதிகபட்சமாக டெல்லி அணியின் ககிஸோ ரபாடா, 30 விக்கெட்டுக்களை சாய்த்தார். எந்தவொரு பந்துவீச்சாளரும் ஹெட்ரிக் சாதனை படைக்கவில்லை

அத்துடன், இம்முறை .பி.எல் பருவத்தில் மொத்தம் 4,868 ஓட்டமற்ற பந்துகள் வீசப்பட்டன. அதிலும் குறிப்பாக, .பி.எல் வரலாற்றில் முதல்தடவையாக நான்கு போட்டிகள் சுப்பர் ஓவர் வரை சென்றன.  

மேலும், இம்முறை .பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் 10 பந்துவீச்சாளர்களில் 7 வேகப் பந்துவீச்சாளர்களும், 3 சுழல் பந்துவீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளனர்.

இதில் 5 வெளிநாட்டு வீரர்களும், 5 உள்நாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளதுடன் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி 9ஆவது இடத்தையும், தங்கராசு நடராஜன் 10ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், இம்முறை .பி.எல் தொடரில் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட பந்துவீச்சாளர்கள் யார்? என்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

  1. ககிஸோ ரபாடா (30 விக்கெட்)
BCCI

டெல்லி கெபிடல்ஸ் அணி இம்முறை இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற ககிஸோ ரபாடா ஒரு முக்கிய காரணமாக அமைந்தார். இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரரும் ரபாடா தான்

IPL தொடரில் துடுப்பாட்டத்தில் ஜொலித்தவர்கள்

இவரின் பந்துவீச்சு டெல்லி அணியை பல முறை தோல்விகளிலிருந்து மீட்டுள்ளது. ரபாடா, அன்ட்ரிச் நோர்ட்ஜே கூட்டணி டெல்லி அணிக்கு பெரிய பலமாக அமைந்தது.  

இம்முறை .பி.எல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய ரபாடா, 30 விக்கெட்டுக்களை வீழ்த்தி அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரருக்கான ஊதா நிற தொப்பியை தட்டிச் சென்றார்.

2.ஜஸ்பிரித் பும்ரா (27 விக்கெட்)

BCCI

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக விளங்கி வருபவர் ஜஸ்பிரித் பும்ரா. லசித் மாலிங்க இல்லாத குறையை பும்ரா சிறப்பாக சரி செய்து வருகிறார்.  

இம்முறை .பி.எல் தொடரின் ஆரம்பத்தில் பும்ரா சிறப்பாக பந்து வீசவில்லை. ஓட்டங்களை வாரி வழங்கினார். முக்கிய போட்டிகளில் விக்கெட் வீழ்த்தவில்லை. கொரோனா வைரஸ் காலப்பகுதியில் கிடைத்த ஓய்வால் அவர் போர்ம் இழந்து விட்டார் என பலரும் குறை  கூறியிருந்தனர்

.பி.எல் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், பின்னர் சிறப்பான போர்மை எட்டியுள்ளார். டெர்த் ஓவர்களில் தனது வேகமான யோர்க்கர் மற்றும் மித வேகப்பந்து மூலம் துடுப்பாட்ட வீரர்களை பும்ரா திணறடித்து வந்தார். இவர் இதுவரை விளையாடியுள்ள 15 போட்டிகளில் 27 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்

Video – IPL தொடரில் கலக்கும் Yorker King நடராஜனின் கதை!

அதிலும் குறிப்பாக, டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற .பி.எல் தொடரில் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா, அதிக விக்கெட்டுக்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றார். எனினும், பும்ரா அடுத்த போட்டியில் அவரை முந்தினார். 

குறித்த போட்டியில் நான்கு ஓவர்களில் 14 ஓட்டங்கள் மாத்திரம் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்த அவர், ஒரு .பி.எல் பருவத்தில் அதிக விக்கெட்டுக்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்

எனவே, .பி.எல் தொடரின் ஆரம்பத்தில் விட்ட தவறை சரிசெய்து இம்முறை .பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய பும்ரா, விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுத்து மிரள வைத்துள்ளார்.

  1. ட்ரெண்ட் போல்ட் (25 விக்கெட்)
BCCI

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ட்ரெண்ட் போல்ட் இம்முறை .பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.

இம்முறை .பி.எல் தொடரில் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் டிரெண்ட் போல்ட் தான். இவரின் விக்கெட் வேட்டை தொடக்க ஓவர்களில் துடுப்பெடுத்தாடுகின்ற அணியை திணறடித்துள்ளது.

சர்ச்சைகளால் வலம்வந்த IPL முதல்பாதி ஆட்டங்கள்

இம்முறை போட்டித் தொடரில் மும்பை அணியின் வேகப் பந்துவீச்சில் சிம்மசொப்பனமாக வலம்வந்த இவர், இறுதிப் போட்டியில் 30 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

இதன்மூலம் இம்முறை .பி.எல் பருவத்தில் 25 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி 3ஆவது இடத்தைப் பிடித்தார்

இறுதிப் போட்டியில் முதல் பந்திலேயே டெல்லி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் இந்த பருவத்தில் முதல் ஓவரில் மொத்தமாக 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்

இதன்படி, ஒரு பருவத்தில் முதல் ஓவரில் அதிக விக்கெட் கைப்பற்றி போல்ட் புதிய சாதனை படைத்தார். முன்னதாக 2016ஆம் ஆண்டு புவனேஷ்வர் குமார் 6 விக்கெட்டுக்களையும், 2013இல் பிரவீன் குமாரும், 2012இல் சஹீர் கானும் தலா 5 விக்கெட்டுகளை முதல் ஓவரில் கைப்பற்றி இருந்தனர்.

  1. அன்ட்ரிச் நோர்ட்ஜே (22 விக்கெட்)
BCCI

இம்முறை .பி.எல் தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றதில் அன்ட்ரிச் நோர்ட்ஜேவுக்கு முக்கிய பங்கு உண்டு.

டெல்லி அணி விளையாடிய முக்கியமான போட்டிகளில் இவரது சிறப்பான செயல்பாடு தான் அந்த அணியை தொடர்ந்து 2வது முறையாகபிளே–ஓப்சுற்றுக்கு அழைத்துச் சென்றது

Video – சுழல் நாயகன் வருண் சக்ரவர்த்தியின் போராட்டப் பயணம்..!

இம்முறை .பி.எல் தொடரில் ரபாடாவுடன் இணைந்து எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு தொல்லை கொடுத்த நோர்ட்ஜே 16 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

  1. யுஸ்வேந்திர சாஹல் (21 விக்கெட்)
BCCI

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு சாஹலின் பந்துவீச்சும் ஒரு முக்கிய காரணம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான 2ஆவது தகுதிச் சுற்றில் பெங்களூர் அணி தோல்வியைத் தழுவினாலும், அந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை எடுத்தார்.

பெங்களூர் அணிக்காக அவர் விளையாட ஆரம்பித்த காலம் முதல் மத்திய ஓவர்களில் விக்கெட்டுக்களை வீழ்த்தி அந்த அணிக்குத் தேவையான நேரத்தில் பங்களிப்பு செய்து வருகின்றார்.

இடைநடுவில் IPL தொடரை தவறவிட்ட முன்னணி வீரர்கள்

அத்துடன், ஓட்ட விகிதத்தை குறைக்கவும் சாஹல் உதவி வருகிறார். இம்முறை .பி.எல் தொடரில் அவர் விளையாடிய 15 போட்டிகளில் 21 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியதுடன், அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நான்காவது இடத்தையும் பெற்றுக்கொண்டார். 

விராத் கோஹ்லியின் தலைமையில் பெங்களூர் அணிக்காக விக்கெட்டுக்களை எடுப்பதில் முன்னிலை வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற சாஹல், இந்திய அணிக்காக விளையாடி பல வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுக் கொடுத்தாலும், அவர் விளையாடி வருகின்ற பெங்களூர் அணி இதுவரை .பி.எல் சம்பியன் பட்டத்தை வெல்லவிவ்லை என்ற சோகம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<