இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக், தன்னுடைய தலைமை பதவியை இயன் மோர்கனிற்கு வழங்கியுள்ளார் என அந்த அணியின் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.
தினேஷ் கார்த்திக் அவருடைய துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்துவதற்காக தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அணி முகாமைத்துவத்திடம் தெரிவித்துள்ளதாக, அந்த அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி வென்கி மைசோர் குறிப்பிட்டார்.
>> ஒரே போட்டியில் இரட்டை சாதனை படைத்த கோஹ்லி
“தன்னுடைய துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தும் முகமாக அணித்தலைவர் பதவியை இயன் மோர்கனிடம் கையளிப்பதாக தினேஷ் கார்த்திக் எமது முகாமைத்துவத்திடம் தெரிவித்தார்.
கொல்கத்தா அணியை எப்போதும் முன்னிலையாக நினைக்கும் தினேஷ் கார்த்திக் போன்ற தலைவரை பெற்றது சிறந்த விடயமாகும். இதுபோன்ற ஒரு முடிவினை எடுப்பதற்கு அதிகமான தைரியம் வேண்டும். அதேநேரம், இவரின் இந்த தீர்மானத்தைக்கண்டு நாம் ஆச்சரியப்பட்டதுடன், அவரது இந்த முடிவுக்கு மதிப்பளிக்கிறோம்” என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “இதேவேளை 2019ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட அணித்தலைவர் இயன் மோர்கனை எமது அணியில் பெற்றுக்கொண்டமை அதிர்ஷ்டமாகும். அவர்தான் இதுவரை உப தலைவராக செயற்பட்டுவந்தார்.
>> Video – டோனி ஏன் நடராஜனிடம் விக்கெட்டினை கொடுத்தார்? | Cricket Galatta Epi 41
இப்போது அணியின் தலைவராக இயன் மோர்கன் செயற்படவுள்ளார். இந்த தொடரில் தினேஷ் கார்த்திக் மற்றும் இயன் மோர்கன் ஆகியோர் இணைந்து அணியை சிறப்பாக வழிநடத்தி சென்றனர். அதேபோன்று, தொடர்ந்தும் இணைந்து செயற்படுவார்கள் என நினைக்கிறேன்” என வென்கி மைசோர் சுட்டிக்காட்டினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த முறை ஐ.பி.எல். தொடரில் இதுவரை 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் கொல்கத்தா அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<