IPL அரங்கில் ஷிகர் தவான் புதிய பதிவு

234
Shikar dhawan
@BCCI

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரில் டெல்லி கெபி்டல்ஸ் அணி வீரர் ஷிகர் தவான் 600 ஓட்டங்களைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

அபுதாபியில் நேற்று (08) நடைபெற்ற இறுதிப் போட்டிக்கான 2அவது தகுதிச் சுற்றில் டெல்லி கெபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

>> IPLல் இல் புது வரலாறு படைத்தார் தவான்!

இதில் ஷிகர் கர் தவான், மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் கங்கிஸோ ரபாடா கைகொடுக்க, 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி முதல்தடவையாக .பி.எல் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது டெல்லி அணி.  

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி, மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஷிகர் தவான ஜோடியின் அதிரடியான ஆட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஓட்டங்களை எடுத்தது.

இதில் 6 பௌண்டரிகள் 2 சிக்ஸர்களை விளாசிய ஷிகர் தவான் 50 பந்துகளில் 78 ஓட்டங்களைக் குவித்து .பி.எல் அரங்கில் 41ஆவது அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அத்துடன் இந்த சீசனில் 600 ஓட்டங்களுக்கு மேல் குவித்து புதிய சாதனையொன்றை படைத்தார்.

>> லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் மீண்டும் மாற்றம்

இதுவரை நடைபெற்ற .பி.எல். தொடர்களில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோஹ்லி மொத்தம் 192 போட்டிகளில் விளையாடி 5,878 ஓட்டங்களைக் குவித்து முதல் இடத்தில் உள்ளார்

இந்தப் பட்டியலில் 5ஆவது இடத்தில் இருந்த ஷிகர் தவான் நேற்றைய போட்டியின் மூலம் ரோஹித் சர்மாவை (5,162 ஓட்டங்கள்) பின்னுக்குத் தள்ளி 4ஆவது இடத்திற்கு (5,182 ஓட்டங்கள்) முன்னேறியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு .பி.எல். தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்து கே.எல்.ராகுல் (670) முதல் இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 603 ஓட்டங்களை எடுத்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் .பி.எல் வரலாற்றில் முதல்முறையாக 600 ஓட்டங்களைக் கடந்துள்ளார் தவான்.

எதுஎவ்வாறாயினும், இம்முறை .பி.எல் தொடரின் முதல் பாதியில் ஷிகர் தவான், ஒவ்வொரு போட்டியிலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எனினும், தொடரின் நடுப்பகுதியில் தன் ஆட்டத்தை மாற்றி, அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தார்.

>> லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் மீண்டும் மாற்றம்

இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து சதம் அடித்து சாதனை படைத்த ஷிகர் தவான், அடுத்து இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதனால் ஒரே சீசனில் நான்கு முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் அவர் இணைந்து கொண்டார்.

மேலும், இதுவரை 14 பிளேப் இன்னிங்ஸில் விளையாடியிருந்த ஷிகர் தவான் 194 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் அவரது அதிகபட்ச ஓட்டங்களாக 34 பதிவாகியது

அந்த மோசமான சாதனையை நேற்றைய போட்டியில் தவான் முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.