இம்முறை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் பங்கேற்கவுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் கிட்டத்தட்ட 50 பிரத்தியேக வலைப் பந்துவீச்சாளர்களை டுபாய் அழைத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் – 19 வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
IPL தொடரை நடத்த அனுமதி கிடைத்துவிட்டது
இதற்காக ஐ.பி.எல் அணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி டுபாய் செல்கின்றன. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மட்டும் சேப்பாக்கத்தில் ஒரு வாரம் பயிற்சிகள் எடுத்து 22ஆம் திகதி டுபாய் புறப்பட உள்ளது. இதன்படி, ஒவ்வாரு அணிகளும் 24 வீரர்களை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொவிட் – 19 வைரஸ் காரணமாக மார்ச் மாதம் முதல் இந்திய வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை. இதில் பந்துவீச்சாளர்கள் விரைவில் போட்டிகளுக்கு தயாராகி விடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், துடுப்பாட்ட வீரர்கள் பழைய போர்முக்கு திரும்ப நீண்ட நாட்கள் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீரர்கள் டுபாய் சென்று 14 நாட்கள் தம்மை தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளது. இதில் ஒவ்வொரு அணியிலும் தலா 24 வீரர்கள் இடம்பெற்றுள்ளதால் இரண்டு அணியாக பிரித்து விளையாடுவது கடினம்.
Video – LPL இல் களமிறங்கும் நட்சத்திரங்கள்|Sports RoundUp – Epi 127
அதுமாத்திரமின்றி, போட்டிகள் நடைபெறும் இடத்தில் உள்ள உள்ளூர் பந்துவீச்சாளர்களை வலைப்பயிற்சிக்கு அணிகள் பயன்படுத்திக் கொள்ளும்.
தற்போது கொவிட் – 19 வைரஸ் காரணமாக பலத்த பாதுகாப்பு வழிகாட்டல் நெறிமுறைகள் உள்ளதால் டுபாயில் உள்ளூர் வலைப் பந்துவீச்சாளர்களை தயார் செய்ய முடியாத நிலை உள்ளது.
இதனால் சென்னை சுப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் 23 வயத்துக்குட்பட்ட, 19 வயதிற்கு உட்பட்ட, முதல்–தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் பந்துவீச்சாளர்களை வலைப் பந்துவீச்சாளர்களாக அழைத்து செல்ல இருக்கிறது.
இதன்படி, இம்முறை ஐ.பி.எல் தொடரில் குறைந்தது 50 இளம் கிரிக்கெட் வீரர்கள் வலைப் பந்துவீச்சாளர்களாக ஐக்கிய அரபு இராச்சியம் பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் தொடருக்கு மேலும் சில நிபந்தனைகள்
இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பத்து பந்துவீச்சாளர்களை அழைத்துச் செல்லவுள்ளது. அதேபோல, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பத்து பேரையும், டெல்லி அணி 6 வீரர்களையும் அழைத்துச் செல்ல உள்ளது.
இதனிடையே, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் அழைத்துச் செல்லும் பிரத்தியேக பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கையை இறுதி செய்ய உள்ளது.
இந்த வீரர்கள் அனைவரும் ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாகும் வரை அணிகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை அணியில் மேலதிகமாக வீரர்களை அழைத்துச் செல்வது தொடர்பில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கருத்து தெரிவிக்கையில்,
”இந்த பருவத்தில் உள்ளூர் பந்து வீச்சாளர்கள் வலைப் பயிற்சியில் பயன்படுத்தப்பட உள்ளனர். ஆனால் போட்டிகளுக்கான கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கும். அனைத்து அணிகளும், தரமான பந்து வீச்சாளர்களுக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
அடுத்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் இந்தியாவில்
”ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள பயிற்சிகளுக்காக பிரத்தியேகமாக 10 பந்துவீச்சாளர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். அவர்கள் அணியுடன் வருவார்கள். போட்டி தொடங்கும் வரை இருப்பார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
இதுஇவ்வாறிருக்க, ஒட்டுமொத்த மேலதிக பந்துவீச்சாளர்களின் பட்டியலில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுழல்பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க