ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடைபெறும் திகதியில் திடீர் மாற்றம்?

306

இவ்வருடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 8ஆம் திகதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 10ஆம் திகதி நடத்தப்பட உள்ளதாக பி.சி.சி.ஐ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தீபாவளி தினத்தை கருத்திற் கொண்டு ஐ.பி.எல் போட்டியின் இறுதிப் போட்டி பிற்போடப்பட வேண்டும் என்று ஒளிபரப்பாளர்கள் கோரியிருந்த நிலையில், மேலும் 2 தினங்கள் கழித்து இறுதிப்போட்டி நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது

இது குறித்து இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள .பி.எல் நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஐ.பி.எல். போட்டிகளுக்கான திகதிகள் அறிவிப்பு

கொவிட் – 19 வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட .பி.எல் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதிவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட உள்ளதாக பி.சி.சி.ஐ தரப்பில் முன்னர் கூறப்பட்டது.

ஐ.பி.எல். தொடருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

முன்னதாக .பி.எல் போட்டிகள் செப்டம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த நிலையில், அணி உரிமையாளர்கள், ஒளிப்பரப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 19ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது

இந்த நிலையில், .பி.எல் ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் இந்தியா தீபாவளி நவம்பர் 14ஆம் திகதி (சனிக்கிழமை) வருவதால் அதிகமான விளம்பரங்கள் தங்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

Video – IPL எதிர் LPL…! எது கெத்து? |Sports RoundUp – Epi 125

எனவே, ஸ்டார் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, தற்போது .பி.எல் அட்டவணையில் மேலும் திருத்தம் மேற்கொள்ள .பி.எல் நிர்வாகக் குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது

இதன்படி, இறுதிப் போட்டியை நவம்பர் 8ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதிக்கு மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள .பி.எல் நிர்வாகக் குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் 51 நாட்கள் நடத்தப்பட இருந்த .பி.எல் போட்டிகள் 54 நாட்கள் நடைபெறவுள்ளது. அதிலும் குறிப்பாக, முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த இறுதிப்போட்டி செவ்வாய்க்கிழமைக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

IPL வீரர்களுக்கு வாரத்தில் இருமுறை கொரோனா பரிசோதனை

நவம்பர் 10ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக இறுதிப் போட்டி நடைபெறும் என்றால் முதன்முறையாக வரலாற்றில் ஞாயிற்றுக்கிழமை அல்லாத தினத்தில் .பி.எல் இறுதிப் போட்டி நடைபெறும்.

இது இவ்வாறிருக்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இறுதிப் போட்டியை முடித்துவிட்டு நாடு திரும்பவிருந்த இந்திய அணியினர் நேராக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்

அங்கு டிசம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வகையில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல், பயிற்சிகள் உள்ளிட்டவற்றை இந்திய அணியினர் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<