காயம் காரணமாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் சென்னை அணியின் கடைசி போட்டியில் விளையாடாத அம்பத்தி ராயுடு, அடுத்த லீக் போட்டியிலும் விளையாட மாட்டார் என சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்டது.
டோனியின் தலைமைத்துவத்தை கடுமையாக விமர்சித்த கம்பீர்
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த அம்பத்தி ராயுடு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடனான இரண்டாவது லீக் போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை.
எனினும், ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் சென்னை அணி 10 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடனான தோல்விக்கு மத்திய வரிசையில் அம்பத்தி ராயுடு போன்ற வீரரொருவர் இடம்பெறாமை முக்கிய பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை அணி விளையாடவுள்ள டெல்லி கெபிடல்ஸ் அணியுடனான மூன்றாவது லீக் போட்டியில் அம்பத்தி ராயுடு களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், அவர் காயத்திலிருந்து பூரணமாக குணமடையாத காரணத்தினால் அந்தப் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
Video – டோனி, கோஹ்லி, டிவில்லியர்ஸின் முத்தான சாதனைகள் |Sports RoundUp – Epi 133
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”நாளை (25) டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அம்பத்தி ராயுடு விளையாட வாய்ப்பில்லை.
அவரது உடல்நிலை குறித்து கவலையடைய ஒன்றுமில்லை. அவருக்குத் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அடுத்துவரும் ஒரு போட்டியில் விளையாடாமல்் இருப்பார். ஆனால், சரியான நேரத்தில் அவர் போட்டியில் பங்கேற்க தயாராகவும் இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.
இதன்படி, ஒக்டோபர் 2ஆம் திகதி நடைபெறவுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அம்பத்தி ராயுடு விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, காயம் காரணமாக இதுவரை சென்னை அணிக்கு விளையாடாத டுவைன் பிராவோ, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகக் களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<