ஐ.பி.எல். தொடரில் நேற்று (09) நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில்லின் சிறந்த துடுப்பாட்டத்தின் ஊடாக கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி வெற்றிபெற்று, தங்களுடைய ப்ளே-ஓஃப் (play off) வாய்ப்பை அதிகரித்துள்ளது.
மொஹாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி ஆரம்பத்தில் தங்களுடைய விக்கெட்டுகளை இழந்த போதும், பின்னர் வருகைத்தந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் சாம் கரன் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்களின் உதவியுடன் 20 ஓவர்களில் 183 ஓட்டங்களை குவித்தது.
ஐ.பி.எல் தொடரிலிருந்து அனைத்து ஆஸி. வீரர்களும் வெளியேற்றம்
உலகக்கிண்ண தொடருக்கான ஆஸி. குழாமில் இடம்பெற்ற வோர்னர், ஸ்மித், ஸ்டொய்னிஸ்…
பஞ்சாப் அணி மந்தமான ஓட்ட எண்ணிக்கயுடன் துடுப்பெடுத்தாடும் போது, களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 27 பந்துகளில் 48 ஓட்டங்களை குவிக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியை வெளிப்படுத்திய சாம் கரன் 24 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர்களுக்கு அடுத்தப்படியாக மயங்க் அகர்வால் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். கொல்கத்தா அணியின் பந்து வீச்சில் சந்தீப் வொரியர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் துடுப்பாடக் களமிறங்கிய கொல்கத்தா அணி, ஆரம்பம் முதல் சிறப்பாக துடுப்பெடுத்தாடியது. குறிப்பாக இளம் வீரர் சுப்மன் கில் மிகச்சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இவருடன் ஜோடி சேர்ந்து அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய க்ரிஸ் லின் 22 பந்துகளில் 46 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரொபின் உத்தப்பா 22 ஓட்டங்களையும், அன்ரே ரசல் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற சுப்மன் கில் 49 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். மறுமுனையில் தினேஷ் கார்த்திக் 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க கொல்கத்தா அணி 2 ஓவர்கள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்தது. பந்து வீச்சில் மொஹமட் ஷமி 15 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி 12 புள்ளிகளை பெற்றுள்ளதுடன், ப்ளே-ஓஃப் வாய்ப்பை தக்கவைப்பதற்கு மும்பையுடன் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெற வேண்டும். அதிலும், இன்று நடைபெறவுள்ள பெங்களூர் அணியுடனான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றால், கொல்கத்தா அணி அடுத்த போட்டியில் மிகச்சிறந்த ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும்.
இம்ரான் தாஹிரின் சுழலால் வீழ்ந்த டெல்லி கெப்பிட்டல்ஸ்
சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (01) நடைபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ்…
அதேநேரம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ப்ளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், தங்களுடைய இறுதிப் போட்டியில் 160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதுடன், ஹைதராபாத் அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும் என்பதுடன், கொல்கத்தா அணியும் அடுத்தப் போட்டியில் தோல்வியடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி சுருக்கம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 183/6 (20) – செம் கரன் 55 (24), நிக்கோலஸ் பூரன் 48 (27), மயங்க் அகர்வால் 36 (26), சந்தீப் வொரியர் 31/2
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 185/3 (20) – சுப்மன் கில் 65 (49), க்ரிஸ் லின் 46 (22), மொஹட் சமி 15/1
முடிவு – கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<