பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு நேற்றைய தினம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரீவன் ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜியண்ட் ஆகிய அணிகள் மோதின. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அம்லாவின் அதிரடியில் வீழ்ந்த குஜராத் லயன்ஸ் : மோசமான சாதனை படைத்தது பெங்களூர்
விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை)…
இதையடுத்து புனே அணியின் அஜிங்கியா ரகானே, ராகுல் திருப்பதி ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இவர்கள் இருவரும் இணைந்து 76 ஓட்டங்களை இணைப்பாட்டமாக சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்.
ரகானே 38 ஓட்டங்களும், திருப்பதி 45 ஓட்டங்களும் சேர்த்தனர். எனினும், அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அணித் தலைவர் ஸ்மித் 17 ஓட்டங்கள் மட்டுமே அடித்தார். டோனி 7 ஓட்டங்கள், ஸ்டோக்ஸ் 17 ஓட்டங்கள் என மோசமான பங்களிப்பை வழங்கினர்.
கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய மனோஜ் திவாரி 4 பவுண்டரிகளுடன் 22 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். எனவே, 20 ஓவர் முடிவில் புனே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் கரண் சர்மா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஹர்பஜன் சிங், மிட்செல் ஜோன்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 161 என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக பட்லர், பார்த்திவ் பட்டேல் ஆகியோர் களம் இறங்கினர்.
மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குறிப்பாக முக்கிய வீரர்கள் சோபிக்கத் தவறினர். பார்த்திவ் பட்டேல் 33 ஓட்டங்களையும், பட்டேல் 17 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொலாட் வெறும் 9 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஏமாற்றமளித்தார். எனினும், மறுபுறத்தில் அதிரடி காட்டிய அணித் தலைவர் ரோகித் சர்மா 39 பந்துகளில் 58 ஓட்டங்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதன் காரணமாக புனே அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி தனது 4ஆவது வெற்றியை பதிவு செய்தது. அதேபோல் மும்பை அணி தனது இரண்டாவது தோல்வியை சந்தித்தது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற புனே அணி பின்னர் ஹட்ரிக் தோல்வியை சந்தித்து, தற்போது ஹட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அற்புதமாக பந்து வீசிய பென்ஸ் ஸ்டோக் 4 ஓவர்களில் 21 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
10ஆவது ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் விளையாடிய டோனி, ஐ.பி.எல் இல் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளார். நேற்றைய போட்டி அவரது 150ஆவது ஐ.பி.எல் போட்டியாகும். அதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மாவுக்கும் இது 150ஆவது ஐ.பி.எல் போட்டியாகும்.
சகல துறையிலும் பிரகாசித்த சஜித் சமீர; வெற்றியை சுவீகரித்த மேல் மாகாண கனிஷ்ட அணிகள்
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் 2017ஆம் ஆண்டிற்கான..
இந்தப் பட்டியலில் குஜராத் லயன்ஸ் அணியின் தலைவர் சுரேஷ் ரெய்னா 154 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தினேஷ் கார்த்திக்(145), கோஹ்லி(143), ரொபின் உத்தப்பா(142), யூசுப் பதான்(141) ஆகியோர் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளனர்.
அதேபோன்று, நேற்றைய தினம் ஹர்பஜன் சிங்கும் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளார். T-20 போட்டிகள் வரலாற்றில் 200ஆவது விக்கெட்டை நேற்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் வீழ்த்தியுள்ளார்.
ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் ஹர்பஜன் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அவர் 225ஆவது T-20 போட்டியில் தனது 200 ஆவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இப்போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் எனும் சாதனை டிவைன் பிராவோ (367) வசமுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் 160/6(20) – ரகானே 38(32), திருப்பதி 45(31), திவாரி 22(13), கரண் சர்மா 39/2(4), பும்ரா 29/2(4)
மும்பை இந்தியன்ஸ் 157/8(20) – ரோஹித் சர்மா 58(39), பென்ஸ் ஸ்டோக் 21/2(4)