பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரின் 49ஆவது போட்டியில் மெக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 14 ஓட்டங்களினால் த்ரில் வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
லங்கஷைர் அணிக்காக ஒப்பந்தமாகும் மஹேல ஜயவர்தன
பிளேஒஃவ் சுற்றுக்கு தகுதி பெற கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கியது.
சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கிய அவ்வணி சார்பில் மார்ட்டின் குப்தில், வோரா ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களம் இறங்கினர்.
வோரா 16 பந்தில் 25 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், குப்தில் 16 பந்தில் 12 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த ஷோன் மார்ஷ் 11 ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
பின்னர் 4ஆவது வீரராகக் களம் இறங்கிய சகா 38 ஓட்டங்களும், அடுத்து வந்த மெக்ஸ்வெல் 25 பந்தில் 44 ஓட்டங்களும் எடுக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதைத் தொடர்ந்து 168 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களம் இறங்கிய எஸ்.பி நரைன் 18 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய கௌதம் கம்பீர் 8 ஓட்டங்களையும், உத்தப்பா ஓட்டங்கள் எதுவும் பெற்றுக்கொள்ளாத நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சி.ஏ. லின் அதிரடியாக விளையாடி 84 ஓட்டங்களைக் குவித்தார்.
ஏனைய வீரர்கள் ஓட்டங்களை குவிக்கத் திணறியதன் காரணமாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.
நரைனின் புதிய சாதனையுடன் கொல்கத்தாவுக்கு வெற்றி
பஞ்சாப் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய திவேதியா, எம்.எம். ஷர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி பிளேஓஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டுள்ளது. அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெரும் பட்சத்தில் பஞ்சாப் அணி பிளேஒஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 167/6 (20) – மெக்ஸ்வெல் 44(25), விருத்திமன் சஹா 38(33)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 153/6 (20) – சி.ஏ. லின் 84(52), திவேதியா 18/2(4), எம்.எம். ஷர்மா 24/2(3)