சம்சன், பான்ட்டின் அதிரடியில் இமாலய இலக்கை விரட்டிய டெல்லி

501
IPL Roundup

இந்த பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரின் 42ஆவது லீக் போட்டியில் டெல்லி டேர்டேவில்ஸ் அணி, குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுக்களினால் அசத்தல் வெற்றியினை பதிவு செய்துள்ளது.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடக் களம் இறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுமித்(9), மெக்கலம்(1) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

திருப்பதியின் அதிரடியால் பிளே ஒப் வாய்ப்பை தக்கவைத்தது புனே அணி

பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகளில்..

குஜராத் அணி 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ரெய்னாவும், தினேஷ் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்தனர். ரெய்னா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசினார். மறுபக்கம் முதலில் நிதானமாக விளையாடிய தினேஷ் கார்த்திக் பின்னர் அதிரடி காட்டினார். இதனால் குஜராத் அணியின் ஓட்ட வேகம் கிடுகிடுவென உயர்ந்தது.  

குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் எடுத்தது. பின்ச் 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்துகளில் சிக்ஸர் விளாசிய ஜடேஜா 7 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணியில் ரபாடா, கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை எடுத்தனர்.

இதனையடுத்து 209 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கடின இலக்கை துரத்திய டெல்லி அணி நிதானம் கலந்த அதிரடியுடன் துடுப்பெடுத்தாடியது. அவ்வணியின் ஆரம்ப வீரரான சம்சன் 31 பந்துகளில் 61 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இவருடன் களமிறங்கிய கே.கே. நாயர் 12 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஆர்.ஆர். பேண்ட் அதிரிடியாக விளையாடி 43 பந்துகளில் 97 ஓட்டங்களைக் குவித்தார்.

யுவராஜ் சிங்கின் அதிரடி வீண் : போராடி வென்றது டெல்லி

பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகள்..

அதனைத் தொடர்ந்து அவ்வணியின் அன்டர்சன் 18 ஓட்டங்களுடனும், எஸ்.எஸ் ஐயர் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன் காரணமாக டெல்லி அணி 17.3 ஓவர்களில் 214 ஓட்டங்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போட்டியின் சுருக்கம்

டெல்லி டேர்டேவில்ஸ் 208/7 (20) – ரெய்னா 77(43), டினேஜ் கார்த்திக் 65(34), ரபாடா 28/2, கம்மின்ஸ் 30/2

குஜராத் லயன்ஸ் 214/3 (17.3) – ஆர்.ஆர். பேண்ட் 97(43), சம்சன் 61(31)

போட்டி முடிவு- குஜராத் லயன்ஸ் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றி