இந்த பருவகாலத்திற்கான .பி.எல் தொடரின் நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டு முக்கிய போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைசிங் பூனே சூப்பர்ஜியன்ட்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் லயன்ஸ்

மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற பலம் பொருந்திய மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியின் நிறைவில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

ரொபின் உத்தப்பாவின் அதிரடியுடன் நடப்பு சம்பியனுக்கு அதிர்ச்சியளித்த கொல்கத்தா

விறுவிறுப்பான முறையில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்தன…

மும்பை அணியில் டிம் சவுத்திக்குப் பதிலாக லசித் மாலிங்க இணைத்துக் கொள்ளப்பட்டார். அதேபோன்று, குஜராத் அணியில் ஆரோன் பிஞ்சிற்குப் பதிலாக ஜேசன் ரோயும், ஷடாப் ஜகதிற்குப் பதிலாக முனாப் பட்டேலும் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

குஜராத் அணியின் வெயின் ஸ்மித், பிராண்டன் மெக்கலம் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை மும்பையின் மெக்ளெனகன் வீசினார். முதல் ஓவரின் 2ஆவது பந்தில் ஸ்மித் ஓட்டங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளாத நிலையில் டக்அவுட் ஆனார். அடுத்து ரெய்னா களம் இறங்கினார். 2ஆவது விக்கெட்டுக்கு மெக்கலம்ரெய்னா ஜோடி 80 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டது.

ரெய்னா 28 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், மெக்கலம் 44 பந்தில் 64 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடினார். இவரது ஆட்டத்தால் குஜராத் அணி 150 ஓட்டங்களை தாண்டியது. இசான் கிஷான் 14 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து ஜேசன் ரோய் களமிறங்கினார். இருவரும் இணைந்து கடைசி 2 ஓவரில் 22 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள குஜராத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 48 ஓட்டங்களையும், ரோய் 7 பந்துகளில் 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து 177 என்ற வெற்றி இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் பார்தீப் பட்டேல், பட்லர் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களம் இறங்கினர். ஆட்டத்தின் 2ஆவது பந்தில் பட்டேல் ஓட்டங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளாத நிலையில் டக்அவுட் ஆனார்.

அடுத்து பட்லருடன் ராணா ஜோடி சேர்ந்தார். இந்த தொடரில் அசத்தி வரும் ராணா இந்த போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பொல்லார்ட் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதற்கிடையே பட்லர் 26 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அணித்தலைவர் ரோகித் சர்மா இறுதிவரை ஆட்டமிழப்பின்றி 29 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, மும்பை இந்தியன்ஸ் 19.3 ஓவரில் 177 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தொடரின் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, இது நான்காவது வெற்றியாகும். முதல் போட்டியில் தோல்வியடைந்தபின் தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளை அவ்வணி பெற்றுள்ளது.

.பி.எல் போட்டிகளில் பலம்பொருந்திய அணியாகக் காணப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி, நேற்றைய வெற்றி மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனையை முறியடித்துள்ளது.

அவுஸ்திரேலிய முன்னணி தொடரில் இலங்கையின் வலைப்பந்து நட்சத்திரம் தர்ஜினி

இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி, அவுஸ்திரேலியாவின் முன்னணி கழக அணியான …

T-20 போட்டிகளின் வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பதிவுசெய்த அணியாக டோனி தலைமையிலான சென்னை அணி காணப்பட்டது. அந்த அணிக்கான .பி.எல் தடை அமுலுக்கு வரும்வரையில் 94 வெற்றிகளைக் குவித்து முதலிடத்தில் இருந்தது.

நேற்றைய வெற்றி மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணி 95ஆவது வெற்றியை பெற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முந்தியுள்ளது. இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் லங்காஷைர் அணி 90 வெற்றிகளுடன் 3ஆவது இடத்தில் காணப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

குஜராத் லயன்ஸ் 176/4(20)மெக்கலம் 64(44), டினேஸ், கார்த்திக் 48(26)

மும்பை இந்தியன்ஸ் 177/4(19.3)ராணா 53(36), ரோகித் சர்மா 40(29)


ரைசிங் பூனே சூப்பர்ஜியன்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு

நேற்றைய போட்டியில் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ரைசிங் பூனே சூப்பர்ஜியன்ட்ஸ் அணிகள் போட்டியிட்டன. அதில் ரைசிங் பூனே சூப்பர்ஜியன்ட்ஸ் அணி 27 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கோலி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

அதன்படி முதலில் ஆடிய ரைசிங் பூனே சூப்பர்ஜியன்ட்ஸ் அணிக்கு ரஹானே(30), திருப்பதி(31), ஸ்மித்(27), டோனி(28) என எல்லோரும் மிக நல்ல பங்களிப்பை கொடுத்தனர்.

கடந்த 4 போட்டிகளில் வெறுமனே 33 ஓட்டங்களை மட்டுமே குவித்த டோனி, நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி ஒரு பந்தை மைதானத்துக்கு வெளியில் பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தியிருந்தார்.

எனினும், டோனியின் ஆட்டமிழப்பை தொடர்ந்து மேலதிக 3 ஓட்டங்கள் பெற்ற ரைசிங் பூனே சூப்பர்ஜியன்ட்ஸ் அணி, 5 விக்கெட்டுக்களை இழந்து தள்ளாடினாலும், இறுதி நேரத்தில் மனோஜ் திவாரி 11 பந்துகளில் 27 ஓட்டங்கள் பெற்றுக்கொடுக்க பூனே அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்கள் குவித்தது.

பதிலுக்கு 161 எனும் இலக்குடன் சொந்த மண்ணில் இலகுவான வெற்றியைப் பெறும் என எதிர்பார்த்த கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மோசமான முறையில் ஆடியமையினால் தோல்வியடைந்துள்ளது.

கோலி 28 ஓட்டங்களையும் டி வில்லியர்ஸ் 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தாலும் அதன்பின்னர் வந்த வீரர்கள் சரியான பங்களிப்பை கொடுக்காத நிலையில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பந்து வீச்சுத் துறையில் இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களான சார்தல் தாகூர் 3 விக்கெட்டுக்களையும், உனட்கட் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

கடந்த பருவகால இறுதிப் போட்டியில் விளையாடிய கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 5 போட்டிகளில் கிடைத்த 4ஆவது தோல்வி இதுவாகும். பூனே அணிக்கு 5ஆவது போட்டியில் கிடைத்த 2ஆவது வெற்றி இதுவாகும்.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிய  பென் ஸ்டொக்ஸ் பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

ரைசிங் பூனே சூப்பர்ஜியன்ஸ்: 161/8(20) – திருப்பதி 31(23), ரகானே 30(25)

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு: 134/9(20)டி வில்லியர்ஸ் 29(30), பென் ஸ்டொக்ஸ் 183(4)

  மேலும் பல செயதிகளைப் படிக்க