ஐ.பி.எல் அரங்கில் நேற்றைய தினமும் சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லாத வகையில் இரண்டு போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
புனேயில் இடம்பெற்ற முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தின. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
பொன்டிங்கின் கனவு ஐ.பி.எல் அணியில் நட்சத்திர பந்து வீச்சாளராக லசித் மாலிங்க
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின்..
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மார்ட்டின் கப்தில், சகா ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர்.
போட்டி தொடங்கியதுமே பஞ்சாப் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. உனத் கட் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே கப்தில், திவாரியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து அவ்வணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிய ஆரம்பித்தன. ஷோன் மார்ஷ் 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
மோர்கன் 4 ஓட்டங்களில் ரன் அவுட் ஆக, டெவாட்டியா 4 ஓட்டங்களிலும், மெக்ஸ்வெல் ஓட்டங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளாத நிலையிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.
சகா 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அக்சார் பட்டேல் 22 ஓட்டங்களும், ஸ்வாப்னில் சிங் 10 ஓட்டங்களும் அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 73 ஓட்டங்களுக்கு சுருண்டது.
புனே அணியில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், உனத்கட், ஆடம் சம்பா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 74 என்ற இலகுவான வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திரிபாதி 20 பந்துகளில் 28 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ரகானேயுடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.
தமிழக வீரர் சங்கரின் அதிரடியில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஹைதராபாத்
பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினமும் சுவாரசியங்களுக்கு..
இதனால் புனே அணி 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 78 ஓட்டங்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரகானே 34 பந்துகளில் 34 ஓட்டங்களுடனும், ஸ்மித் 18 பந்தில் 15 ஓட்டங்களுடனும் இறுதிவரை ஆட்டமிழப்பின்றி களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 14 போட்டிகளில் 9இல் வெற்றி பெற்ற புனே அணி பிளேஓஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
போட்டியின் சுருக்கம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 73 (15.5) – அக்சர் பட்டேல் 22(20), ஷர்துல் தாகூர் 19/3(4), உனத்கட் 12/2(3), ஆடம் சம்பா 22/2(2)
ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் 78/1 (12) – ரகானே 34(34), திரிபாதி 28(20)
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர் டெல்லி டேர்டெவில்ஸ்
இதேவேளை, நேற்றைய தினம் டெல்லியில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி டேர்டேவில்ஸ் அணியும் மோதின.
இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய அவ்வணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களை குவித்தது. அவ்வணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கிரிஸ் கெயில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஐந்தாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்த நிலையில் விராட் கோலி மற்றும் கிரிஸ் கெயில் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். பெங்களூரு அணி 12 ஓவர்கள் முடிவில் 90 ஓட்டங்களை குவித்தது.
அணி சார்பில் கிரிஸ் கெயில் அதிகபட்சமாக 48 ஓட்டங்களையும், விராட் கோலி 58 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 162 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய டெல்லி டேர்டேவில்ஸ் அணியின் எஸ்.வி. சம்சன் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் இரண்டாவது பந்திலேயே அரங்கு திரும்பினார்.
எம்மை எந்த அணியும் தொடரிலிருந்து வெளியேற்றலாம் : மாலிங்க
சர்வதேச கிரிக்கெட் வாரியமானது (ICC), பலத்த எதிர்பார்ப்புகளுடன்..
இவருடன் களமிறங்கிய மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கே.கே. நாயர் 26 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்க, எஸ்.எஸ். ஐயர் 32 ஓட்டங்களையும், ஆர்.ஆர். பண்ட் 45 ஓட்டங்களையும் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் மொகமட் சமி ஸ்டம்பிங் முறையில் தனது விக்கெட்டை இழந்தார். பின் கடைசி பந்தில் நதீம் பிடி கொடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக பெங்களூரு அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் சுருக்கம்
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 161/6 (20) – விராட் கோலி 58(45), கெயில் 48(38)
டெல்லி டேர்டெவில்ஸ் 151(20) – பான்ட் 45(34), எஸ்.எஸ். ஐயர் 32