இந்த ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) T20 தொடரை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) அறிவித்திருக்கின்றது.
கொரோனா வைரஸ் எதிரொலி: டி20 உலகக் கிண்ணம் நடைபெறுமா?
கொரோனா வைரஸ் பாதிப்பினால் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும்…
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இந்த ஆண்டு ஐ.பி.எல். T20 தொடரின் 13ஆவது பருவகாலத்திற்கான போட்டிகளை மார்ச் 29ஆம் திகதி தொடக்கம் மே 24ஆம் திகதி வரையில் நடாத்த தீர்மானித்திருந்தது.
எனினும், கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக இந்தியாவில் தொடர்ந்து 21 நாட்களுக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் ஐ.பி.எல். போட்டிகள் இந்த மாத நடுப்பகுதி (ஏப்ரல் 15) வரை ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி நேற்று (14) இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட 21 நாட்கள் கொண்ட ஊரடங்குச் சட்டம் மே 03ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுவதாக அறிவித்திருந்தார். இந்தியப் பிரதமரின் இந்த அறிவிப்பினை அடுத்தே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையும், இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றது.
டோனியை ஓய்வு முடிவுக்கு தள்ளாதீர்கள் – இங்கிலாந்து வீரர் எச்சரிக்கை
தலைமுறையில் ஒரு முறை மட்டுமே தோன்றும் வீரர் டோனி என்றும் அவரால் 3…
இதேநேரம், இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட விடயம் ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்திருக்கின்றது.
ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க வீரர்களுடன் விளையாடவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் கொரோனா வைரஸ் பிரச்சினையினால் இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியக் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி ஜப்பானில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் தொடர், விம்பிள்டன் டென்னிஸ் தொடர் என்பனவும் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.
இதுதவிர, இந்த ஆண்டின் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரும் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நடைபெறுமா? என்ற சந்தேகத்தினை தற்போது எழுப்பியிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்<<