ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவில் கிரிக்கெட் போட்டிகள்

550
IOC accepts recommendation to include T20 cricket

2028ஆம் ஆண்டு லொஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக் (LA) விளையாட்டு விழாவில் கிரிக்கெட் போட்டிகளை உள்வாங்குவதற்கான பரிந்துரையினை சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு (IOC) ஏற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

அந்தவகையில் கிரிக்கெட் போட்டிகளின் குறுகிய வடிவமான T20 போட்டிகள் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்காக 2028ஆம் ஆண்டுக்கான லொஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடப்படுவதற்கான பரிந்துரையே தற்போது ஏற்கப்பட்டிருக்கின்றது.

>> அவுஸ்திரேலிய போட்டியில் மாற்றங்களை மேற்கொள்ளும் இலங்கை அணி?

குறிப்பிட்ட பரிந்துரைக்கு அமைய அடுத்த கட்டமாக ஒக்டோபர் 16 தொடக்கம் 18ஆம் திகதி வரை மும்பையில் நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் ஒன்று கூடலின் போது கிரிக்கெட் போட்டிகளை உள்வாங்குவதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும் எனக் கூறப்பட்டிருக்கின்றது

எனவே சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் வாக்கெடுப்பு நிறைவுக்கு வந்ததன் பின்னர் கிரிக்கெட் போட்டிகள் 2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் சேர்ப்பதற்கான இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவிருக்கின்றது

ஏற்கனவே கிரிக்கெட் போட்டிகளை பொதுநலவாய விளையாட்டு விழாவில் சேர்க்கின்ற சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) முயற்சி வெற்றியளித்து 2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவில், கிரிக்கெட் போட்டிகள் ஆடப்பட்டதனை அடுத்து ஒலிம்பிக்கிலும் கிரிக்கெட் விளையாட்டு உள்வாங்கப்படுவற்கான வாய்ப்புக்கள் தற்போது அதிகரித்திருக்கின்றது

>> ஐசிசியின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாகிய சமரி அதபத்து!

அதேவேளை கிரிக்கெட் விளையாட்டோடு மாத்திரமின்றி ஒலிம்பிக்கில் பேஸ்போல் (Baseball), ப்ளாக் கால்பந்து (Flag Football), ஸ்குவாஷ் மற்றும் லக்ரோஷே (Lacrosse) போன்ற விளையாட்டுக்களை சேர்ப்பதற்கான பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<