ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சிரீ A மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (27) அதிகாலை நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,
ரியல் மெட்ரிட் எதிர் ரியல் வலடொலிட்
ரியல் வலடொலிட் அணிக்கு எதிராக பிந்திய நேர கோல் மூலம் 1-0 என வெற்றியீட்டிய ரியல் மெட்ரிட் அணி லா லிகாவில் பார்சிலோனாவை பின்தள்ளி முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது.
பார்சிலோனா அணி முக்கிய போட்டியில் தோல்வி
ஸ்பெயின் லா லிகாவில் முதலிடத்தில் ……..
வலன்சியா அணிக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் பார்சிலோன 2-0 என தோல்வியடைந்தது சினேடின் சிடேனின் ரியல் மெட்ரிட் முன்னேற்றம் காண வாய்ப்பாக அமைந்தது.
எனினும், இந்தப் போட்டி ரியல் மெட்ரிட்டுக்கு இலகுவாக இருக்கவில்லை. தனது சொந்த மைதானத்தில் ஆடிய ரியல் வலடொலிட் கடும் நெருக்கடி கொடுத்தது.
க்ரூசிடம் இருந்து வந்த ப்ரீ கிக்கை ரியல் மெட்ரிட் மத்திய கள வீரர் கசிமிரோ தலையால் முட்டி கோல் பெற்றபோதும் வீடியோ நடுவர் உதவியுடன் அது ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது.
மறுபுறம் வலடொலிட் அணி சார்பில் போட்டியில் பிந்திய நேரத்தில் செர்கியோ குவார்டியோலா பந்தை வலைக்குள் செலுத்தியபோதும் அந்த கோலும் கூட ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் 78 ஆவது நிமிடத்தில் டோனி க்ரூஸ் பரிமாற்றிய பந்தை பின்கள வீரர் நிகோ தாவித் தலையால் முட்டி ரியல் மெட்ரிட்டின் வெற்றி கோலை பெற்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் லா லிகாவில் பெறும் முதல் கோல் இதுவாகும்.
புனித பெனடிக் கல்லூரியை இலகுவாக வீழ்த்தியது கொழும்பு ஸாஹிரா
பாடசாலை அணிகளுக்கு இடையிலான Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் ……..
இதன்படி 2017 க்குப் பின் சம்பியன் பட்டம் வெல்லாத ரியல் மெட்ரிட் 21 போட்டிகளில் 46 புள்ளிகளை பெற்று முதலிடத்திற்கு முன்னேறி இருப்பதோடு பார்சிலோனா 43 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் செவில்லா 38 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் காணப்படுகின்றன.
நபோலி எதிர் ஜுவன்டஸ்
சிரீ A தொடரில் முதலிடத்தில் இருக்கும் ஜுவன்டஸ் அணி நபோலி அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி ஒன்றை எதிர்கொண்டது. எனினும் நட்சத்திர வீரர் கிறிடியானோ ரொனார்டோ தொடர்ச்சியாக எட்டாவது லீக் போட்டியிலும் கோல் பெற்றார்.
இந்த தோல்வியுடன் ஜுவன்டஸின் முன்னிலை இரண்டாவது இடத்தில் இருக்கும் இன்டர் மிலானிடம் மூன்று புள்ளிகளில் பின்தங்கியது. ஞாயிற்றுக்கிழமை நடந்த கக்லியாரி அணிக்கு எதிரான போட்டியை இன்டர் மிலான் 1-1 என சமநிலை செய்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் முதல் பாதி கோலின்றி முடிவுற்ற நிலையில் 53 ஆவது நிமிடத்தில் ரொனால்டோ பந்தை வலைக்குள் செலுத்தியபோதும் அது ஓப் சைடாக இருந்தது. தொடர்ந்து 62 ஆவது நிமிடத்தில் ஹிகுவைன் வலையை நோக்கி பந்தை வேகமாக உதைத்தபோது ஜுவன்டசுக்கு பொன்னான கோல் வாய்ப்பாக அது இருந்தது. எனினும் எதிரணி கோல் காப்பாளர் அலெக்ஸ் மெரட் அதனை தடுத்தார்.
ஒரு நிமிடம் கழித்து பியோட்ஸ் சிலின்ஸ்கி கோல் பெற்று நபோலியை முன்னிலை பெறச் செய்ததோடு, போட்டியின் முழு நேரம் முடிவதற்கு நான்கு நிமிடங்கள் இருக்கும்போதும் நபோலி அணித்தலைவர் லொரன்சோ இன்சிக்னே இரண்டாவது கோலையும் பெற்றார்.
எனினும் 90 ஆவது நிமிடத்தில் வைத்து ரொனால்டோ இரு நபோலி பின்கள வீரர்களுக்கு இடையால் கோல் புகுத்தினார்.
PSG எதிர் லில்லே
நெய்மரின் இரட்டை கோல் மூலம் லில்லே அணிக்கு எதிராக 2-0 என வெற்றியீட்டிய பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி லீக் 1 புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.
போட்டியின் 28 ஆவது நிமிடத்தில் 20 யார் தூரத்தில் இருந்து நெய்மார் அபார கோல் ஒன்றை புகுத்தினார். இந்நிலையில் ம்பாப்பே உதைத்த பந்து ரெய்னில்டோ மன்டாவாவின் கையில் பட PSG அணிக்கு ஸ்பொட் கிக் வழங்கப்பட்டது. அதனை நெய்மர் கோலாக மாற்றினார்.
வாய்ப்புக்கள் வீணாக பாரோ அணியை சமன் செய்த டிபெண்டர்ஸ்
பூட்டானின் பாரோ கால்பந்து கழகத்திற்கு எதிராக……….
அட்லடிகோ மெட்ரிட் எதிர் லெகான்ஸ்
லா லிகாவில் 19 ஆவது இடத்தில் இருக்கும் லெகான்ஸ் அணிக்கு எதிராக தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியை அட்லடிகோ மெட்ரிட் கோலின்றி சமநிலை செய்து மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது.
தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றி இன்றி தவித்து வரும் அட்லடிகோ தனது சொந்த ரசிகர்கள் முன் வெற்றி எதிர்பார்ப்புடன் களமிறங்கியபோதும் எந்த கோல் வாய்ப்பையும் அந்த அணியால் பெற முடியாமல்போனது.
போட்டியின் மேலதிக நேரத்தில் வைத்து எதிரணி கோல் காப்பாளர் இவான் கியுலர் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேறிய நிலையிலும் அந்த பலவீனத்தைக் கொண்டு அட்லடிகோவால் கோல் திருப்ப முடியவில்லை.
இதனால் அந்த அணி லா லிகாவில் ஐந்தாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<