லிவர்பூலுக்கு மற்றொரு வெற்றி: மெஸ்ஸி கோலால் வென்றது பார்சிலோனா

181

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, 

லிவர்பூல் எதிர் மன்செஸ்டர் யுனைடட்

அன்பீல்டில் நடைபெற்ற மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடி 2-0 என வெற்றியீட்டிய லிவர்பூல் அணி 30 ஆண்டுகளின் பின் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளது. புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் அணி இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் 16 புள்ளிகள் இடைவெளியுடன் முன்னணியில் உள்ளது. 

ரியல் மெட்ரிட்டுக்கு தீர்க்கமான வெற்றி: முக்கிய ப்ரீமியர் லீக் போட்டிகள் சமநிலையில்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா …

தனது சொந்த மைதானத்தில் உத்வேகத்துடன் போட்டியை ஆரம்பித்த லிவர்பூல் அணி 14 ஆவது நிமிடத்திலேயே கோல் புகுத்தியது. ட்ரென்மட் அலெக்சாண்டர்-ஆர்னோல்டின் கோனரை யுனைடட் வீரர்களின் அவதானத்தை பெறாத நிலையில் வான் டிஜ்க் தலையால் முட்டி கோலாக மாற்றினார்.  

ரொபார்டோ பர்மினோ இரண்டாவது கோல் ஒன்றை பெற்றதாக எதிர்பார்க்கப்பட்டபோதும் வான் டிஜ்க் இழைத்த தவறு வீடியோ நடுவர் உதவி மூலம் கண்டறியப்பட்டதை அடுத்து அது நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து லிவர்பூல் மீண்டும் பந்தை வலைக்குள் செலுத்தியபோது அது ஓப் சைடாக இருந்தது. 

யுனைடட் அணி பெரிதாக எதிரணி கோல் கம்பத்தை ஆக்கிரமிக்காதபோதும் அன்ட்ரிஸ் பெரைராவின் பொன்னான கோல் வாய்ப்பு ஒன்று தவறிப்போனது. 

இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் பரபரப்பான நேரத்தில் மொஹமட் சலாஹ்வுக்கு நெருக்கமான தூரத்தில் கிடைத்த கோல் பெறும் வாய்ப்பு தவறிப்போனது. 

கடைசி நேரத்தில் பதில் கோல் திருப்பும் அவசரத்தில் மன்செஸ்டர் யுனைடட் வீரர்கள் எதிரணி கோல் பகுதியை ஆக்கிரமிக்க முயன்றபோது லிவர்பூல் கோல்காப்பளர் அலிசன் பெக்கர் நீண்ட தூரத்தில் இருக்கும் சலாஹ்வுக்கு பந்தை வழங்க அவர் அதனை மேலதிக நேரத்தில் கோலாக மாற்றினார்.  

இந்த போட்டியில் தோற்றபோதும் மன்செஸ்டர் யுனைடட் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கியது. 

பார்சிலோனா எதிர் கிரனடா

பத்து வீரர்களுடன் ஆடிய கிரனடா அணிக்கு எதிராக இரண்டாவது பாதியில் லியோனல் மெஸ்ஸி பெற்ற கோல் மூலம் பார்சிலோன அணி லா லிகாவில் ரியல் மெட்ரிட்டை பின்தள்ளி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

அதேபோன்று, பார்சிலோனாவின் புதிய பயிற்சியாளர் குயிக் செட்டியனின் முதல் போட்டியிலேயே அந்த அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

பார்சிலோனா தனது பயிற்சியாளர் எர்னஸ்டோ வல்வெர்டேவை கடந்த வாரம் திடீரென பணி நீக்கிய நிலையிலேயே அந்த அணி மீண்டும் அரங்கு திரும்பியது. 

பங்களாதேஷிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டது இலங்கை

இலங்கைக்கு எதிரான பங்கபந்து தங்கக் கிண்ண ……..

தனது சொந்த மைதானமான கெம்ப் நூவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 80 வீதமான நேரம் பந்து பார்சிலோனா வீரர்களின் கால்களில் இருந்தபோதும் அவர்கள் கோலை நோக்கி செலுத்துவதில் அதிக வேகம் காட்டவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுற்றது. 

இந்நிலையில் 69 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி மீது தவறிழைத்த ஜெர்மனி வீரரான சான்செஸ் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேறியது பார்சிலோனாவுக்கு சாதகமாக இருந்தது. இதற்கு 7 நிமிடங்களின் பின் மெஸ்ஸி பார்சிலோனாவின் வெற்றி கோலை புகுத்தினார்.  

அணியாக பந்தை சிறப்பாக பரிமாற்றி எதிரான கோல் நிலையை நோக்கி கொண்டுவர மின்னல் வேகத்தில் அதனை கோலாக மாற்றினார் மெஸ்ஸி. 

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<