இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஜெர்மனி புண்டெஸ்லிகா தொடர்களின் இந்த வாரத்தின் முக்கியமான சில போட்டிகள் சனிக்கிழமை (ஓகஸ்ட் 31) நடைபெற்றதோடு பிரான்ஸ் லீக் 1 தொடரில் மெட்ஸ் அணிக்கு எதிராக பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி 2-0 என வெற்றியீட்டியது.
இதேவேளை, பலம் மிக்க பார்சிலோனா அணி ஒசாசுனா அணிக்கு எதிரானபோட்டியை 2 –2 என சமநிலை செய்தது.
UEFA சிறந்த வீரர் விருதை வென்றார் டிஜ்க்
நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை…
மெட்ஸ் எதிர் பரிஸ் செயின்ட் ஜெர்மைன்
கடந்த வாரம் டொலொஸ் அணிக்கு எதிரான போட்டியை 4-0 என இலகுவாக வெற்றி கொண்ட பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி, சனிக்கிழமை இடம்பெற்ற மெட்ஸ் அணிக்கு எதிரான போட்டியை 2-0 என வெற்றி கொண்டு லீக் 1 தொடரில் புள்ளிப் பட்டியிலில் முதல் இடத்தைப் பிடித்தது.
அவ்வணிக்காக ஆர்ஜன்டீன மத்தியகள வீரர் டி மரியா 11ஆவது நிமிடத்தில் முதல் கோலையும் சோபோ மொடின் 43ஆவது நிமிடத்தில் அடுத்த கோலையுமு் பெற்றுக் கொடுத்தார்.
மென்செஸ்டர் சிட்டி எதிர் பிரைட்டன்
கெவின் டி பிருயின் 68 ஆவது நிமிடத்தில் பந்தை வலைக்குள் செலுத்த செர்கியோ அகுவேரா இரட்டை கோல் புகுத்தியதன் மூலம் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி அணி பிரைட்டனுக்கு எதிரான போட்டியில் 4-0 என இலகு வெற்றியீட்டியது.
இந்த பருவத்தில் இதுவரையான நான்கு ப்ரீமியர் லீக் போட்டிகளில் அகுவேரா 5 கோல்களை பெற்றிருப்பதோடு, சிட்டி அணிக்காக மாற்று வீரராக வந்த பெர்னாடோ சில்வா நான்காவது கோலை புகுத்தினார். எனினும் இந்தப் போட்டியில் சிட்டி அணி தனது பிரான்சின் பின்கள வீரர் ஐமெரிக் லபோர்டை காயத்தால் இழந்தது மாத்திரமே ஒரே பின்னடைவாக இருந்து.
லிவர்பூல் எதிர் பர்ன்லி
இம்முறை ப்ரீமியர் லீக்கில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் லிவர்பூல் அணி பர்ன்லி அணிக்கு எதிரான போட்டியிலும் 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
போட்டியின் ஆரம்பத்தில் லிவர்பூல் அணிக்கு சரிசமமாக ஆடிய பர்ன்லி 33 ஆவது நிமிடத்தில் துரதிஷ்டவசமாக பின்னடைவை சந்தித்தது. அலெக்சாண்டர் ஆர்னோல்ட் உதைத்த பந்து பர்ன்லி அணியின் கிறிஸ் வூட்டின் பின்புறமாக பட்டு ஓன் கோலாக மாறியது.
தொடர்ந்து சாடியோ மானே மற்றும் ரொபார்டோ பர்மினோ ஆகியோர் அபார கோல் புகுத்தி இந்த பருவத்தில் லிவர்பூல் அணியின் தொடர்ச்சியான நான்காவது வெற்றியை பதிவு செய்ய உதவினர். லிவர்பூல் அணி தற்போது 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதோடு அந்த அணியை விடவும் இரண்டு புள்ளிகள் குறைவாக பெற்று சிட்டி இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.
மன்செஸ்டர் யுனைடட் எதிர் சௌதம்டன்
இதனிடையே சனிக்கிழமை நடைபெற்ற மன்செஸ்டர் யுனைடட் மற்றும் சௌதம்டன் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது.
கிரிஸ்மனின் இரட்டை கோல்களால் மெஸ்ஸி இன்றி பார்சிலோனா வெற்றி
இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய…
மன்செஸ்டர் யுனைடட் அணிக்காக 10 ஆவது நிமிடத்தில் ஜேம்ஸ் கோல் பெற, 58ஆவது நிமிடத்தில் வெஸ்டேகாரட் ஒரு கோலைப் பெற்று சௌதம்டன் அணியின் முதல் கோலைப் பதிவு செய்தார்.
ஏனைய போட்டி முடிவுகள்
- செல்சி 2 – 2 செபீல்ட் யுனைடெட்
- வெஸ்ட் ஹாம் 2 – 0 நோர்விச் சிட்டி
- நியுகாசில் 1 – 1 வொட்போர்ட்
பார்சிலோனா எதிர் ஒசாசுனா
இந்தப் போட்டியிலும் பிரபல வீரர் மெஸ்ஸி மற்றும் சுவாரெஸ் இன்றி ஆடிய பார்சிலோனா அணிக்கு எதிராக ஒசாசுனா அணிக்காக ஸ்பெயின் வீரர் ரொபேடோ டொர்ரெஸ் ஏழாவது நிமிடத்தில் முதல் கோலைப் பெற்றார்.
எனினும், 51 மற்றும் 61ஆவது நிமிடங்களில் பார்சிலோனா அணி அடுத்த கோல்களைப் பெற்று முன்னியடைந்தது. எனினும், 80ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியின்மூலம் டொர்ரெஸ் சமநிலை கோலைப் பெற்றார்.
இந்த முடிவுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள பார்சிலோனா அணி 4 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. அவ்வணி இதுவரை ஆடிய 3 போட்டிகளில் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு சமநிலையைப் பெற்றுள்ளது.
டோர்ட்முண்ட் அதிர்ச்சித் தோல்வி
பொருசியா டோர்ட்முண்ட் அணிக்கு எதிராக 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சி கொடுத்த யூனியன் பெர்லின் அணி ஜெர்மனி புண்டெஸ்லிகா தொடரிலும் தனது முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது.
பலம் மிக்க இந்தியாவுடன் போராடி வீழ்ந்த இலங்கை கனிஷ்ட அணி
இந்தியாவுக்கு எதிராக மற்றொரு தோல்வியுடன் இலங்கை கனிஷ்ட கால்பந்து அணி 15…
இதன்மூலம் ஜெர்மனி லீக்கில் டொர்ட்முண்ட் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து 3 புள்ளிகள் பின்தங்கி ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 22 ஆவது நிமிடத்தில் மாரியஸ் புல்டர் புதிதாக அந்தஸ்து உயர்ந்த யூனியன் பெர்லின் அணிக்காக முதல் கோலை புகுத்தியபோதும் டொட்முண்ட் அணி வீரர் அல்கேசர் 3 நிமிடங்களில் பதில்கோல் திருப்பினார்.
இந்நிலையில் மாரியஸ் புல்டர் தனது இரண்டாவது கோலை போட டோர்ட்முண்ட் அணிக்கு எதிராக கடைசி நேரத்தில் மற்றொரு கோல் திருப்பப்பட்டது.
பயேர்ன் முனிச் எதிர் மெயின்ஸ்
எவ்வாறாயினும் நடப்புச் சம்பியன் பயேர்ன் முனிச் 45 நிமிட இடைவெளிக்குள் 6 கோல்களை புகுத்த மெயின்ஸ் அணிக்கு எதிரான போட்டியை அந்த அணி 6-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
தனது ஆரம்ப போட்டியை எதிர்பாராத வகையில் சமநிலை செய்ய நேர்ந்த பெயேர்ன் தனது கடைசி இரண்டு போட்டிகளிலும் மொத்தம் ஒன்பது கோல்களுடன் உறுதியான வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<