தோல்வியுறாத அணியாக ஆண்டை பூர்த்தி செய்த லிவர்பூல்

163

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, 

லிவர்பூல் எதிர் வெல்வர்ஹம்ப்டன் வொன்டரர்ஸ்

அன்பீல்டில் நடைபெற்ற போட்டியில் சர்ச்சைக்குரிய வீடியோ நடுவர் உதவிக்கு (VAR) மத்தியில் வொல்வஸ் அணியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய லிவர்பூல் அணி 13 புள்ளிகள் முன்னிலையுடன் ப்ரீமியர் லீக்கில் முதலிடத்துடன் இந்த ஆண்டை பூர்த்தி செய்தது. 

லிவர்பூல் முதலிடத்தில் தொடர்ந்து ஆதிக்கம்: செல்சிக்கு மற்றொரு தோல்வி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் ‘பொக்சின் ……………

லிவர்பூல் அணிக்காக தனது 150 ஆவது போட்டியில் களமிறங்கிய சாடியோ மானே முதல் பாதி முடிவதற்கு மூன்று நிமிடங்கள் இருக்கும்போதும் வெற்றி கோலை பெற்றார். எனினும் பந்து அடம் லல்லனாவின் கையில் பட்டதாக சர்ச்சை கிளம்பியது. 

நீண்ட நேர வீடியோ நடுவர் உதவிக்கு காத்திருந்த பின் அந்தப் பந்து அவரது தோள் பகுதியில் பட்டது கண்டறியப்பட்டு அந்த கோல் உறுதி செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து வொல்வஸ் கோல் ஒன்றை பெற்றாலும் வீடியோ நடுவர் உதவியால் ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது. 

மொஹமட் சலாஹ் மற்றும் ரொபார்டோ பெர்மினோ மூலம் தனது முன்னிலையை அதிகரிக்க லிவர்பூல் அணிக்கு வாய்ப்புகள் நெருங்கியபோதும் அது கைகூடவில்லை.  

இதன்படி லிவர்பூல் அணி 30 ஆண்டுகளில் முதல் லீக் வெல்லும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டு இந்த ஆண்டை பூர்த்தி செய்துள்ளது. ப்ரீமியர் லீக்கின் இந்தப் பருவத்தில் இதுவரை 19 போட்டிகளில் ஆடி இருக்கும் லவர்பூல் 18 வெற்றி, ஒரு சமநிலையுடன் தோல்விகள் இன்றி 55 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

அந்த அணி இரண்டாவது இடத்தில் இருக்கும் லெய்சஸ்டர் சிட்டியை விடவும் 13 புள்ளிகளால் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஆர்சனல் எதிர் செல்சி 

கடைசி நேரத்தில் பெற்ற இரட்டை கோல் மூலம் ஆர்சனல் அணிக்கு எதிரான போட்டியில் செல்சி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. ஆர்சனல் புதிய பயிற்சியாளர் மைகல் ஆர்டடே சொந்த மைதாயத்தில் நடந்த முதல் போட்டியிலேயே தோல்வியை எதிர்கொண்டு ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்.  

பிர்ரே எமரிக் அபுமயங் 13 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் ஆர்சனல் முன்னிலை பெற்றபோதும் 83 ஆவது நிமிடத்தில் ஆர்சனல் கோல்காப்பாளர் இழைத்த தவறைக் கொண்டு ஜோர்கின்ஹோ பதில் கோல் திருப்பியதோடு நான்கு நிமிடங்கள் கழித்து டம்மி அப்ரஹாம் செல்சி சார்பில் வெற்றி கோலை பெற்றார். 

செல்சி முந்தைய ஏழு லீக் போட்டிகளில் ஐந்தில் தோற்றபோதும் இந்த வெற்றியுடன் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் தனது நான்காவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

சமநிலைகளால் ஏமாற்றம் காணும் ரியல் மெட்ரிட்: மன். யுனைடட்டுக்கு அதிர்ச்சித் தோல்வி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஸ்பெயின் லா லிகா…………

மன்செஸ்டர் சிட்டி எதிர் ஷபீல்ட் யுனைடட்

எட்டிஹாட் அரங்கில் நடைபெற்ற போட்டியில் செர்கியோ அகுவேரா மற்றும் கெவின் டி ப்ருவ்னே பெற்ற கோல்கள் மூலம் ஷபீல்ட் யுனைடட்டுக்கு எதிரான போட்டியை நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி 2-0 என வெற்றியீட்டியது.   

சிட்டி அணி தற்போது 41 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. நடப்புச் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள அந்த அணி முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும் 14 புள்ளிகளால் பின்தங்கியுள்ளது.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<