மெஸ்ஸியின் காயத்திற்கு இடையே பார்சிலோனா வெற்றி

181

ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சிரீ A தொடர்களின் முக்கிய இரு போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (25) அதிகாலை இடம்பெற்றன. அந்த போட்டிகளின் விபரம் வருமாறு,

பார்சிலோனா எதிர் வில்லாரியல்

இம்முறை லா லிகா பருவத்தை ஆரம்பித்திருக்கும் லயனல் மெஸ்ஸி மீண்டும் காயத்திற்கு உள்ளாகி அரங்கு திரும்பிய நிலையில், வில்லாரியல் அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோன 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது

பிஃபா சிறந்த வீரர் விருதை வென்றார் மெஸ்ஸி

பிஃபாவின் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் …….

கெண்டைக் கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் மைதானம் திரும்பிய மெஸ்ஸி கேம்ப் நூவில் நடந்த போட்டியில் இரண்டாவது பாதி ஆரம்பத்தில் தொடைப் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டு அரங்கு திரும்பினார்

தனது 400ஆவது லா லிகா போட்டியில் களமிறங்கிய மெஸ்ஸி 6 ஆவது நிமிடத்தில் உதைத்த கோனர் கிக்கைக் கொண்டு அன்டோனியோ க்ரீஸ்மன் பந்தை தலையால் முட்டி கோல் பெற்றார்

இதனைத் தொடர்ந்து செர்ஜியோ பஸ்குட்டின் உதவியோடு பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து அபார கோல் ஒன்றை அர்துர் பெற்றதன் மூலம் பார்சிலோனா 2-0 என முன்னிலைபெற்றது.  

இந்நிலையில் பார்சிலோனாவுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்த வில்லாரியல் சார்பில் 44 ஆவது நிமிடத்தில் வைத்து சான்டி கார்சோலா கோல் ஒன்றை பெற போட்டி விறுவிறுப்படைந்தது

எனினும், இரண்டாவது பாதி ஆட்டம் இழுபறியோடு நீடித்த நிலையில் எந்த அணியும் கோல் புகுத்தவில்லை

ஸ்பெயின் லீக்கின் இந்த பருவத்தை மோசமாக ஆரம்பித்த நிலையில் இந்த வெற்றியுடன் பார்சிலோனா அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஜுவன்டஸ் எதிர் ப்ரெசியா

இத்தாலி சீரி A லீக்கிற்கு முன்னேற்றம் கண்டிருக்கும் அறிமுக அணியான ப்ரெசியாவுக்கு எதிரான போட்டியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய ஜுவன்டஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது

முன்னாள் மன்செஸ்டர் சிட்டி மற்றும் லிவர்பூல் வீரர் மரியோ பலடோலி தனது கன்னிப் போட்டியில் பரிமாற்றிய பந்தை ப்ரெசியா அணிக்காக அல்பிரடோ டொனருமா 4 ஆவது நிமிடத்திலேயே கோல் புகுத்தி ஜுவன்டசுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.    

எனினும் 40 ஆவது நிமிடத்தில் வைத்து வெனிசுவேல பின்கள வீரரான ஜோன் சான்சலோ ஓன் கோல் ஒன்றை பெற போட்டி சமநிலையானது. இந்நிலையில் 63 ஆவது நிடத்தில் மிராலம் பிஜனிக் பெற்ற கோல் மூலம் ஜுவன்டஸ் வெற்றியை உறுதி செய்தது

தோள்பட்டை காயம் காரணமான நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றியே ஜுவன்டஸ் இந்தப் போட்டியில் களமிறங்கியது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<