இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை (21) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு.
- பார்சிலோனா எதிர் அலவஸ்
லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டில் தனது 50ஆவது கோலை புகுத்த அலவஸ் அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டியது.
கோலின்றி முடிவுற்ற எல் கிளாசிகோ
ஸ்பெயின் லா லிகா தொடரில் பார்சிலோனா….
லுவிஸ் சுவாரஸ் மூன்று கோல்களைப் பெற உதவியதோடு அவர் சொந்தமாக ஒரு கோலை புகுத்தியமை குறிப்பிடத்தக்கது. தனது சொந்த மைதானமான நூ காம்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெற்ற வெற்றியுடன் லா லிகா புள்ளிப்பட்டியலில் பார்சிலோனா ரியல் மிட்ரிட்டை விடவும் மூன்று புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தை உறுதி செய்தது.
முதல் பாதியில் பார்சிலோனா சார்பில் அன்டொயினே கிரிஸ்மான் ஆரம்ப கோலையும் ஆர்டுரோ விடால் இரண்டாவது கோலையும் புகுத்தினர். எனினும் இரண்டாவது பாதியின் தொடக்கத்திலேயே அல்வேஸ் சார்பில் பேரே பொன்ஸ் கோல் ஒன்றை திருப்பினார்.
எனினும் 25 யார்ட் தூர்த்தில் இருந்து மெஸ்ஸி மின்னல் வேகத்தில் மூன்றாவது கோலை பெற்ற நிலையில் கையில் பந்து பட்டதை அடுத்து கிடைத்த பெனால்டியை சுவாரஸ் கோலாக மாற்றினார்.
இதன்படி பார்சிலோனா நூ காம்பில் இந்த ஆண்டு 24 வெற்றி மற்றும் நான்கு மநிலைகளை பெற்று 2011 க்கு பின் தனது சொந்த மைதானத்தில் முதல்முறை தோல்யுறாத ஆண்டை பதிவு செய்துள்ளது.
ஆர்ஜன்டீன நட்சத்திரம் மெஸ்ஸி கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்பதாவது முறையாக ஓர் ஆண்டில் 50 கோல் மைல்கல்லை எட்டியுள்ளார்.
அதேபோன்று இந்த ஆண்டில் ஐரோப்பிய போட்டிகளில் அதிக கோல் பெற்ற வீரராகவும் பதிவாகவுள்ளார். 2019 இல் அவர் 32 லா லிகா கோல்கள் உட்பட மொத்தம் 34 கோல்களை பெற்றிருப்பதோடு ஏனைய வீரர்களை விடவும் ஐந்து கோல் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
- எவர்டன் எதிர் ஆர்சனல்
குடிசன் பார்க்கில் நடைபெற்ற ஆர்சனல் மற்றும் எவர்டன் அணிகளுக்கு இடையிலான ப்ரீமியர் லீக் போட்டி கோலின்றி சமநிலையில் முடிவுற்றது.
இரு அணிகளினதும் நியமிக்கப்பட்ட புதிய முகாமையாளர்களான கார்லோ அன்செலோட்டி (எவர்டன்) மற்றும் மைக்கல் ஆர்டேடா (ஆர்சனல்) அரங்கில் பார்த்திருந்த நிலையிலேயே இந்தப் போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டி ஆரம்பிப்பதற்கு ஒருசில மணி நேரத்திற்கு முன்னரே எவர்டனின் புதிய முகாமையாளராக மூன்று முறை சம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான ஆன்சலோட்டாவை எவர்டன் கழகம் நியமித்தது. அதேபோன்று ஆர்டேடாவை ஆர்சனல் அணி புதிய தலைமை பயிற்சியாளராக கடந்த வெள்ளிக்கிழமை நியமித்தது.
முன்னாள் அணித் தலைவரை பயிற்சியாளராக நியமித்தது ஆர்சனல்
ஆர்சனல் தனது முன்னாள் அணித் தலைவர்….
போட்டியின் முதல்பாதியில் இரு அணிகளும் கோல் முயற்சியை பெரிதாக நெருங்காத நிலையில் இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் பீர்ரே எம்ரிக் அவுபமெயங் நெருங்கிய தூரத்தில் இருந்து கோலை நோக்கி உதைத்த பந்தை எவர்டன் கோல்காப்பாளர் ஜோர்டன் பிக்போர்ட் அபாரமாக தடுத்தார்.
77 ப்ரீமியர் லீக் போட்டிகளுக்கு பின் ஆர்சனல் ஆடிய போட்டி ஒன்று கோலின்றி முடிவுற்றது இது முதல் முறையாகும்.
- மன்செஸ்டர் சிட்டி எதிர் லெய்செஸ்டர் சிட்டி
லெய்செஸ்டர் அணிக்கு எதிரான போட்டியில் 3-1 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மன்செஸ்டர் சிட்டி ப்ரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் லெய்செஸ்டர் சிட்டியிடம் பின்தங்கியுள்ளது. எனினும் இந்த முடிவினால் முதலிடத்தில் உள்ள லிவர்பூல் 10 புள்ளிகள் இடைவெளியில் ஆதிக்கம் செலுத்துகிறது.
எட்டிஹாட் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லெய்செஸ்டர் சிட்டி சார்பில் ஜெம்மி வார்டி 22 ஆவது நிமிடத்திலேயே கோல் புகுத்தியபோதும் 8 நிமிடங்கள் கழித்து ரியாட் மஹ்ரஸ் பதில் கோல் திருப்பியதோடு தொடர்ந்து இல்காய் குண்டோகன் புகுத்திய கோல் மூலம் மன்செஸ்டர் சிட்டி முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் சிறப்பாக செயற்பட்ட மன்செஸ்டர் சிட்டி சார்பில் காப்ரியல் ஜேசுஸ் மற்றொரு கோலை புகுத்தி வெற்றியை உறுதி செய்தார்.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<