டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் முதல் பாதியில் பின்தங்கிய ஆர்சனல் இரண்டாவது பாதியில் மீட்சி பெற்று போட்டியை 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலை செய்தது.
இரு அணிகளும் வெற்றி வாய்ப்பை பெற்ற இந்த போட்டியை சமநிலை செய்ததன் மூலம் ப்ரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் ஆர்சனல் 7 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியதோடு டொட்டன்ஹாம் 5 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தில் உள்ளது.
லிவர்பூல், சிட்டி அபாரம்: மீண்டும் பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி
இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஜெர்மனி …..
தனது சொந்த மைதானமான எமிரேட்ஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆர்சனல் அணி ஆரம்பத்திலேயே அதிர்ச்சியை எதிர்கொண்டது.
எரிக் லமால கோலை நோக்கி வேகமாக உதைத்த பந்தை ஆர்சனல் கோல் காப்பாளர் தடுக்க முயன்றபோது அந்தப் பந்து கையில் பட்டு வெளியேற கிறிஸ்டியன் எரிக்சன் எதிர்ப்பின்றி பந்தை வலைக்குள் செலுத்தினார். இதன்மூலம் 10 ஆவது நிமிடத்திலேயே டொட்டன்ஹாம் முன்னிலை பெற்றது.
ஆர்சனல் வீரர்கள் பந்தை அதிக நேரம் தன் வசம் வைத்திருந்தபோதும் முதல் பாதி ஆட்டம் டொட்டன்ஹாம் அணிக்கு சாதகமாகவே இருந்தது. பெனால்டி பெட்டிக்குள் சொன் ஹுன்மின்னுக்கு எதிராக கிரானிட் சியாக்கா செய்த அலட்சியமான தவறு ஒன்றினால் டொட்டன்ஹாமுக்கு பெனால்டி ஒன்று கிடைத்தது.
போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் ஹெரி கேன் அதனை கோலாக மாற்ற டொட்டன்ஹாம் வலுவான நிலையை பெற்றது. எனினும் முதல்பாதி ஆட்டம் முடியும் தருணத்தில் அலெக்சான்ட்ரே லகாசெட் எதிரணி தற்காப்பு அரணை முறித்து கோலொன்றை பெற்று அர்சனல் அணிக்கு முதல் கொலை பெற்றுக்கொடுத்தார்.
முதல்பாதி: டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் 2 – 1 ஆர்சனல்
இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஆர்சனல் அணி அதிக வேகம் காட்டியது. ஆரம்பத்தில் அந்த அணி அடிக்கடி எதிரணியின் கோல் எல்லையை ஆக்கிரமித்ததை காண முடிந்தது.
UEFA சிறந்த வீரர் விருதை வென்றார் டிஜ்க்
நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும்…….
மாட்டியோ குவன்டோசி தாழ்வாக உதைத்த பந்தை கோல் செல்லாமல் டொட்டன்ஹாம் கோல் காப்பளர் ஹூகோ லொரிஸ் மயிரிழையில் தடுத்தார். அதேபோன்று டொட்டன்ஹாமின் ஹெரி கேன் உதைத்த பந்து ஒன்று பட்டும் படாமலும் கோல் கம்பத்திலிருந்து வெளியேறியது.
இந்நிலையில் போட்டி முடிவதற்கு 19 நிமிடங்கள் இருக்கும்போது பீயெர் எமரிக் அவுபமெயங் ஆர்சனலுக்காக அபார கோல் ஒன்றை புகுத்தி போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தார். இதன்போது சக வீரர் மட்டியோ குவன்டவுஸ் பரிமாற்றிய பந்தை அவர் வலைக்குள் லாவகமாக தட்டிவிட்டு அந்த கோலை புகுத்தினார்.
ஆர்சனலின் சோக்ரடிஸ் பபஸ்டதோபோலஸ் பெற்ற கோல் ஓப்சைட் என மறுக்கப்பட்டதோடு டொட்டன்ஹாமின் மூசா சிசோகோ கடைசி நேரம் எடுத்த முயற்சியில் பந்து கம்பத்தில் பட்டு வெளியேறியது.
முழு நேரம்: டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் 2 – 2 ஆர்சனல்
கோல் பெற்றவர்கள்
டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் – கிறிஸ்டியன் எரிக்சன் 10′, ஹெரி கேன் 40′ (பெனால்டி)
ஆர்சனல் – அலெக்சான்ட்ரே லகாசெட 40+1′, அவுபமெயங் 71′
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<