சர்வதேச கிரிக்கெட்டின் சாதனைகளும், சம்பவங்களும் – 2019 மீள் பார்வை

244

சர்வதேச கிரிக்கெட்டில் இந்த ஆண்டு பல சுவாரஷ்யமான சம்பவங்கள் மற்றும் சாதனைகள் என்பன நிகழ்த்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் நடைபெற்ற சுவாரஷ்யமான நிகழ்வுகள் மற்றும் சாதனைகளின் தொகுப்புகள் இதோ!

இலங்கைக் கிரிக்கெட்: 2019 ஒரு மீள்பார்வை

நாம் பிரியாவிடை கொடுத்த 2019 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட்..

  • 2020 T20I உலகக் கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணியானது இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளை T20I தரவரிசையில் பின்தள்ளி, 2020ம் ஆண்டுக்கான T20I உலகக் கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை பெற்றது.

  • ஆஸி.யில் சதம் விளாசிய ரிஷப் பண்ட்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 159* ஓட்டங்களை விளாசிய ரிஷப் பண்ட், அவுஸ்திரேலியாவில் வைத்து சதம் விளாசிய முதல் இந்திய விக்கெட் காப்பாளர் என்ற பெருமையை பெற்றார்.International Cricket Review of 2019

  • சஹாலின் சாதனை

அவுஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியொன்றில் மிகச்சிறந்த பந்துவீச்சு பிரதியை பதிவுசெய்து யுஸ்வேந்திர சஹால் சாதனைப் படைத்தார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இவர் 42 ஒட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.International Cricket Review of 2019

  • எண்டிலே பெஹ்லுக்வாயோவிடம் மன்னிப்பு கோரிய சர்பராஸ்

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, எண்டிலே பெஹ்லுக்வாயோவை, இனவெறியை தூண்டும் வகையில் சாடியதற்காக பாகிஸ்தான் அணித் தலைவர் சர்பராஸ் அஹமட் மன்னிப்பு கோரினார். எனினும், ஐசிசியால் இவருக்கு 4 போட்டிகள் விளையாட தடை விதிக்கப்பட்டது.International Cricket Review of 2019

  • 1000ம் விக்கெட்டுகளை பகிர்ந்த எண்டர்சன், ப்ரோட்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, முறையே 557 மற்றும் 433 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் ஸ்டுவர் ப்ரோட் ஆகியோர் தங்களுக்கு இடையில் 1000 விக்கெட்டுகளை பகிரந்தனர்.

  • ஜொஹான் போத்தா ஓய்வு

தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் ஜொஹான் போத்தா பிக் பேஷ் லீக் போட்டி தொடருடன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார்.

> இந்திய தொடருக்கான இலங்கை T20I குழாம் வெளியானது!International Cricket Review of 2019

  • அஞ்செலோ பெரேராவின் இரட்டைச் சத சாதனை

இலங்கை அணி வீரர் அஞ்செலோ பெரேரா (என்.சி.சி) எஸ்.எஸ்.சி. அணிக்கு எதிரான முதற்தர போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இரட்டைச் சதம் கடந்து, ஒரே போட்டியில் இரண்டு இரட்டைச் சதங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

  • BPL 2019இன் சம்பியனானது கொமிலா விக்டோரியன்ஸ்

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கின் இறுதிப் போட்டியில் டாக்கா டைனமைட்ஷ் அணியை எதிர்கொண்ட, கொமிலா விக்டோரியன்ஸ் அணி 2வது தடவையாக சம்பியனாகியது.

  • BBL கிண்ணம் மெல்போர்ன் ரெனகேட்ஸ் வசம்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற BBL 2018-2019 பருவகாலத்தின் சம்பியன் கிண்ணத்தினை ஆரோன் பின்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் வெற்றிக்கொண்டது.

  • T20I போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த ஆப்கானிஸ்தான்

அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது T20I போட்டியில் 278 ஓட்டங்களை குவித்த ஆப்கானிஸ்தான் அணி, T20I போட்டிகளில்  அதிக ஓட்டங்களை குவித்த அணி என்ற பெருமையை பெற்றது.

  • 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீட் கான்

அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது T20I போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீட் கான் 4 பந்துகளுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி, T20I போட்டிகளில் 4 பந்துகளைில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

> இலங்கை இராணுவத்தில் மேஜரானார் திசர பெரேரா

  • இம்ரான் தாஹிரின் ஓய்வு அறிவிப்பு

தென்னாபிரிக்க அணியின் இம்ரான் தாஹிர் உலகக் கிண்ணத் தொடருடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

  • ஐ.பி.எல். தொடரில் வைரலான அஸ்வினின் மேன்கட் ரன்-அவுட்

ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, ஜோஸ் பட்லரை மேன்கட் முறையில் பஞ்சாப் அணியின் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தமை அதிகமாக பேசப்பட்டிருந்தது.

  • ஐ.பி.எல். கன்னிப் போட்டியில் சாதித்த அல்ஷாரி ஜோசப்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தன்னுடைய முதல் ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய அல்ஷாரி ஜோசப், 12 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு பிரதியை பதிவுசெய்தார்.

  • MCCயின் தலைவராக குமார் சங்கக்கார

இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார கிரிக்கெட் விதிமுறைகளை உருவாக்கும் எம்.சி.சியின் (MCC) பிரித்தானியர் அல்லாத முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

  • ஐ.பி.எல். கிண்ணத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, லசித் மாலிங்கவின் அபாரமான இறுதி ஓவரால் கிண்ணத்தை கைவசப்படுத்தியது.

  • போட்டி மத்தியஸ்தரான முதல் பெண்மணி

இந்தியாவின் ஜி.எஸ். லக்ஷ்மி ஐசிசியின் போட்டி மத்தியஸ்தர் குழாத்தின் முதல் பெண் போட்டி மத்தியஸ்தராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

  • உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இங்கிலாந்து

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் சுப்பர் ஓவர் சமனிலையால், பௌண்டரி அடிப்படையில் நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து அணி முதன்முறையாக சம்பியனாகியது.

  • ஜிம்பாப்வே கிரிக்கெட் சபைக்கு தடை

அரசாங்கத்தின் தலையீடு காரணமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் சபைக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் இடைக்கால தடை விதித்தது. எனினும், இந்தத் தடை பின்னர் நீக்கப்பட்டிருந்தது.

  • ஹோல் ஒப் பேம் விருதினை வென்ற சச்சின் டெண்டுல்கர்

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஐசிசி.யினால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது என கருதப்படும் ஹோல் ஒப் பேம் (Hall of fame) விருது இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென்னாபிரிக்காவின் அலன் டொனால்ட் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீராங்கனை கேத்ரின் பிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

  • மொஹமட் அமீர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் அமீர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

  • எல்லிஸ் பெரியின் T20I சாதனை

சர்வதேச T20I கிரிக்கெட்டில் (ஆடவர் மற்றும் மகளிர்) 1000 ஓட்டங்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

  • நோ-போல் பந்துகளை அவதானிக்கும் பொறுப்பு மூன்றாம் நடுவருக்கு

பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சு எல்லையை கடந்து பந்துவீசும் போது, அதனை அவதானித்து நோ-போல் வழங்கும் பொறுப்பினை மூன்றாவம் நடுவர் அவதானிப்பார் என ஐசிசி புதிய விதிமுறையை அறிவித்தது.

  • ஹசிம் அம்லா ஓய்வு

தென்னாபிரிக்க அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான ஹசிம் அம்லா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

>> இராணுவ கழகத்தை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற சந்திமால்

  • ஜஸ்ப்ரிட் பும்ராவின் டெஸ்ட் ஹெட்ரிக்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா, டெரன் ப்ராவோ, ஷாமர் ப்ரூக்ஸ் மற்றும் ரொஸ்டன் சேஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி ஹெட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.

  • ஏஷஷ் கிண்ணத்தை தக்கவைத்தது ஆஸி.

இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஏஷஷ் கிண்ணத் தொடரை 2-2 என சமப்படுத்திய அவுஸ்திரேலிய அணி, கிண்ணத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொண்டது.

  • CPL கிண்ணத்தை வென்றது பார்படோஸ் ட்ரைடன்ஸ்

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் கயானா அமேஷன் வொரியர்ஸ் அணியை வீழ்த்தி, இரண்டாவது முறையாக பார்படோஸ் ட்ரைடன்ஸ் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

  • தலைவர் பதவியிலிருந்து சர்பராஸ் அஹமட் நீக்கம்

பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட் டெஸ்ட் மற்றும் T20I அணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, முறையே அஷார் அலி மற்றும் பாபர் அஷாம் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

  • சகீப் அல் ஹசனுக்கு தடை

பங்களாதேஷ் அணியின் முன்னணி சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன், சூதாட்ட தரகர்களின் முயற்சிகளை ஐசிசிக்கு தெரிவிக்க மறுத்ததால், 2 வருட தடைக்கு உள்ளானார்.

Photo Album – Cric Bash – Cricket Stars

  • தீபக் சஹாரின் T20I பந்துவீச்சு சாதனை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3வது T20I போட்டியில் 7 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய தீபக் சஹார், அஜந்த மெண்டிஸின் சாதனையை முறியடித்து, T20I போட்டிகளில் சிறந்த பந்துவீச்சு பிரதியை பதிவுசெய்தார்.

  • ஐ.பி.எல். ஏலத்தில் பணத்தை அள்ளிய பெட் கம்மின்ஸ்

இம்முறை நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸ் அதிக விலைக்கு வாங்கப்பட்டதுடன், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். இவர், கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிக்காக 15.5 கோடி ருபாவுக்கு வாங்கப்பட்டிருந்தார்.

  • அபிட் அலியின் சாதனை

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய அபிட் அலி கன்னி ஒருநாள் மற்றும் கன்னி டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

  • வெர்னன் பில்லாண்டரின் ஓய்வு

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் தென்னாபிரிக்காவின் வேகப் பந்துவீச்சாளர் வெர்னன் பில்லாண்டர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

  • மொஹமட் ஹபீஸிற்கு பந்துவீசத் தடை

இங்கிலாந்தில் நடைபெற்ற வைட்டாலிட்டி ப்ளாஷ்ட் கிரிக்கெட் தொடரின் போது, ஐசிசியின் விதிமுறைக்கு மாறாக பந்துவீசிய குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தானின் மொஹமட் ஹபீஷிற்கு பந்துவீசத் தடை விதிக்கப்பட்டது.

  • நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றிய ஆஸி.

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிரான பொங்சிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, ஒரு போட்டி எஞ்சியிருக்க தொடரை 2-0 என கைப்பற்றியது.

>> டி20 போட்டிகளில் பந்துவீசத் தயாராகும் அஞ்செலோ மெதிவ்ஸ்

  • பொங்சிங் டே டெஸ்டில் இங்கிலாந்தை முதன்முறையாக வீழ்த்திய தென்னாபிரிக்கா

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான பொங்சிங் டே டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக வெற்றிக்கொண்ட தென்னாபிரிக்க அணி, 11 மாதங்களுக்கு பின்னர் தங்களுடைய முதல் டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்தது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<