உபாதை காரணமாக வெளியேறும் கேன் வில்லியம்சன்!

Pakistan tour of New Zealand 2024

182

நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள அடுத்த மூன்று T20I போட்டிகளிலும் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணியானது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடி வருகின்றது.

பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி இலகு வெற்றி

குறித்த இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் கேன் வில்லியம்சன் விளையாடியிருந்தார். இதில் இரண்டாவது போட்டியில் 15 பந்துகளுக்கு 26 ஓட்டங்களை விளாசியிருந்த வில்லியம்சன் தொடை தசைப்பிடிப்பு உபாதையால் களத்திலிருந்து வெளியேறினார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற IPL தொடரில் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்த அதே வலது தொடைப்பகுதியில் கேன் வில்லியம்சனுக்கு மீண்டும் உபாதை ஏற்பட்டுள்ளது.

குறித்த உபாதைக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் இவர், மூன்றாவது போட்டியில் விளையாடமாட்டார் என உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அடுத்த இரண்டு போட்டிகளிலும் இவர் விளையாடுவதும் சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

கேன் வில்லியம்சனுக்கு பதிலாக வில் யங் அணியில் இணைக்கப்பட்டுள்ள போதும், டிம் செய்பர்ட் மூன்றாவது போட்டியில் களமிறங்குவார் என நியூசிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் 2 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளதுடன், மூன்றாவது போட்டி நாளை புதன்கிழமை (17) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<