சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரரான டெவோன் கொன்வேய் இந்தப் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தில் இருந்தும் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமரியின் சாதனை சதத்தால் தென்னாபிரிக்காவை வீழ்த்தி சரித்திரம் படைத்த இலங்கை
டெவோன் கொன்வேய் இந்த ஆண்டின் பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது T20I போட்டியில் கட்டை விரல் உபாதைக்கு முகம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் தனது உபாதைக்காக அறுவை சிகிச்சைக்கு முகம் கொடுத்த டெவோன் கொன்வேய், IPL தொடரின் இரண்டாம் கட்டத்திற்கான போட்டிகளில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அவருக்கு உபாதை குணமாகாமல் இருப்பது சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் இணைய முடியாத சூழ்நிலையை தோற்றுவித்திருப்பதன் காரணமாகவே அவர் IPL தொடரிலிருந்து முழுமையாக விலகியிருக்கின்றார்.
கடந்த ஆண்டு IPL தொடரின் சம்பியன் பட்டத்தினை சென்னை சுப்பர் கிங்ஸ் வெல்ல முக்கிய காரணமாகியிருந்த டெவோன் கொன்வேய் இந்த ஆண்டுக்கான தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் இணைய முடியாது போனமை அவ்வணிக்கு முக்கிய இழப்பாக மாறியிருக்கின்றது. டெவோன் கொன்வேய் 2023ஆம் ஆண்டு IPL தொடரில் 51.59 என்கிற துடுப்பாட்ட சராசரியோடு 672 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதேவேளை டெவோன் கொன்வேயின் பிரதியீடாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளரான ரிச்சர்ட் கிளீசனை தமது குழாத்திற்குள் உள்வாங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதற்கு முன்னர் IPL போட்டிகளில் ஆடாத ரிச்சர்ட் கிளீசன் The Hundred, BPL, SA20, BBL மற்றும் ILT20 போன்ற முன்னணி லீக் தொடர்களில் ஆடிய அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<