இந்துனேஷிய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான ரொஹ்மாலியா மகளிர் T20 சர்வதேசப் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சுப் பிரதியினைப் பதிவு செய்து புதிய உலக சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.
உகண்டா தொடருக்கான இலங்கை அபிவிருத்தி குழாம் அறிவிப்பு
அந்தவகையில் ஓட்டங்கள் எதுவும் கொடுக்காமல் மகளிர் T20I சர்வதேசப் போட்டியொன்றில் 7 விக்கெட்டுக்கள் (அதாவது 0-7) என்கிற பந்துவீச்சுப்பிரதியினைப் பதிவு செய்தே ரொஹ்மாலியா புதிய சாதனையினை நிலைநாட்டியிருக்கின்றார்.
அத்துடன் சுழல்பந்துவீச்சு வீராங்கனையான இவர் தனது அறிமுக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் குறிப்பிட்ட சாதனையினை மொங்கொலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நிலைநாட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நெதர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியினைச் சேர்ந்த பிரட்ரிக் ஒவர்டிஜ்க் 03 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியதே மகளிர் T20I கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சுப் பிரதியாக கருதப்பட்டிருந்தது. ரொஹ்மாலியா இந்த சாதனையினை தற்போது முறியடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதேநேரம் ரொஹ்மாலியா சாதனைப் பந்துவீச்சுப் பெறுதியினை வெளிப்படுத்திய போட்டியில் இந்துனேஷிய மகளிர் கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 20 ஓவர்களில் 151 ஓட்டங்கள் எடுத்ததோடு, குறிப்பிட்ட போட்டியில் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 152 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மொங்கோலிய அணியானது 24 ஓட்டங்களுக்குள் சுருண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<