சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் அம்பத்தி ராயுடுவின் பந்து வீச்சு சர்வதேச கிரிக்கெட் விதிமுறைக்கு மாறாக வீசப்பட்டதாக போட்டி நடுவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஓவரின் ஏழாவது பந்தில் ஆட்டமிழந்த வீரர்
கிரிக்கெட் விளையாடும் நாடுகளை பொருத்தவரை, சர்வதேச கிரிக்கெட் வீரர்களை அழைத்து லீக் தொடர்களை…
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரான அம்பத்தி ராயுடு (33) நேற்று முன்தினம் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் 2 ஓவர்கள் வீசி, எதிரணிக்கு 13 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதன்போது, ராயுடுவின் பந்துவீச்சு பாணியானது நடுவர்களுக்கு சந்தேகத்தை எழுப்பியிருந்தது.
இதன் காரணமாக போட்டி நிறைவடைந்த பின்னர், நடுவர்கள் போட்டி மத்தியஸ்தரிடம் ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறையிட்டனர். நடுவர்களின் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட போட்டி மத்தியஸ்தர் குறித்த விடயம் தொடர்பில் இந்திய அணி முகாமைத்துவத்துக்கு அறிக்கையொன்றினை வழங்கியுள்ளார்.
குறித்த அறிக்கையில், அம்பத்தி ராயுடுவின் வலது கை சுழற்பந்து வீச்சு, ஐசிசி விதிமுறைகளை மீறியதாக உள்ளது. அவர் எதிர்வரும் 14 நாட்களுக்குள் பந்துவீச்சினை பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அறிக்கையின் முடிவுகள் வரும் வரை அம்பத்தி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்துவீச முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் சுப்மான் கில், விஜய் சங்கருக்கு வாய்ப்பு
இந்திய அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருக்குப் பதிலாக சகலதுறை வீரர் விஜய்…
எவ்வாறாயினும், அம்பத்தி ராயுடு முழுநேர துடுப்பாட்ட வீரர் என்பதால், இந்த முடிவால் அவருக்கு பின்னடைவு ஏற்படாது என்றாலும், பகுதிநேர பந்து வீச்சாளராக அவரால் செயற்பட முடியாது.
அத்துடன், ராயுடு இதுவரை 46 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் மாத்திரமே பந்துவீசியுள்ளதுடன், மொத்தமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<