இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வீரரான கிருஷ்ணப்பா கௌதம், 39 பந்துகளில் சதம் அடித்ததோடு, 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி டி-20 கிரிக்கெட்டில் புதிய சாதனையொன்றைப் படைத்துள்ளார்.
கர்நாடக ப்ரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், பல்லாரி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்ற கிருஷ்ணப்பா கௌதம், ஷிவமோகா அணியுடன் நேற்று (23) நடைபெற்ற லீக் போட்டியில் களமிறங்கினார்.
மாலிங்க தலைமையிலான இலங்கை T20 குழாம் அறிவிப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண் T20 தொடருக்கான…
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பல்லாரி டஸ்கர்ஸ் அணிக்காக அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அவர், 39 பந்துகளில் சதம் அடித்தார். பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் மூலமாக மட்டுமே 106 ஓட்டங்களைக் குவித்த அவர், 56 பந்துகளில் 134 ஓட்டங்களை எடுத்தார்.
இதன் மூலம், கர்நாடக ப்ரீமியர் லீக் தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரராக இடம்பிடித்த அவர், போட்டியொன்றில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராகவும் இடம்பிடித்தார்.
இதனையடுத்து பந்துவீச்சிலும் மிரட்டிய அவர், 4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதில் ஹெட்ரிக் விக்கெட்டும் அடங்கும்.
முன்னதாக இம்மாத முற்பகுதியில் இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் விட்டாலிட்டி பிளாஸ்ட் டி-20 தொடரில் இங்கிலாந்து வீரர் கொலின் ஆக்கர்மன் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை கௌதம் முறியடித்துள்ளார்.
இருந்தாலும் இந்த தொடருக்கு ஐ.சி.சி இன் அங்கீகாரம் இல்லாத காரணத்தால் இவருடைய சாதனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த சாதனையை அடுத்து கௌதமுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், டி-20 போட்டிகளில் சாதனை படைத்தமை குறித்து கிருஷ்ணப்பா கௌதம் கருத்து வெளியிடுகையில், இதை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.
ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் இவர் அந்த அணிக்கும் ஒரு சில போட்டிகளில் இவ்வாறு அதிரடியாக விளையாடி வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
RCB அணியின் பயிற்சியாளரில் அதிரடி மாற்றம்
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) T20 போட்டிகளில் ஆடும் பெங்களூர் றோயல்…
இந்நிலையில் டி-20 போட்டியொன்றில் சதம் அடித்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். இதுவரை டி20 போட்டிகளில் எந்த ஒரு வீரரும் இப்படியான சாதனையை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஷிவமோகா அணி, 16.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 133 ஒட்டங்களை மாத்திரம் எடுத்துகொண்டது. இதனால் பல்லாரி டஸ்கர்ஸ் அணி 70 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. போட்டியின் ஆட்ட நாயகனாக கிருஷ்ணப்பா கௌதம் தெரிவானார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<