இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

1218

இம்மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி இலங்கை அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு T-20 போட்டியிலும் பங்கேற்கவுள்ளது.

இதனடிப்படையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் 16 வீரர்கள் கொண்ட பெயர்ப் பட்டியல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் (BCCI) ஞாயிற்றுக்கிழமை (9) மாலை வெளியிடப்பட்டுள்ளது. 

இப்பெயர்ப் பட்டியல் மூலம், இந்திய அணிக்காக மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை அவ்வணியின்  நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரோஹித் சர்மா பெற்றுள்ளதோடு, சகல துறை ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியாவிற்கும் முதல் தடவையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 

மகளிர் உலகக் கிண்ணத்தில் தொடர்ச்சியான தோல்விகளை சந்திக்கும் இலங்கை

30 வயதாகும் ரோஹித் சர்மா 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக இறுதியாக டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியிருந்தார். அக்காலப்பகுதியில் தொடை உபாதைக்கு உள்ளாகிய காரணத்தினால் அவர் இந்திய டெஸ்ட் குழாமில் தொடர்ந்து அவரினால் பிரகாசிக்க முடியவில்லை.

அண்மைய சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரர்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட ரோஹித் சர்மா மேற்கிந்திய தீவுகள் உடனான தற்போதைய இந்திய அணியின் குழாமிலும் இணைக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்குப் பதிலாக கருண் நாயரிற்கு இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டிருந்தது.

அத்தோடு, இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகள் மற்றும் T-20 போட்டிகளில் ஆடிவரும் ஹர்திக் பாண்டியா இத்தொடர் மூலம் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமாகவுள்ளார். பாண்டியா இக்குழாமிலுள்ள இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், மொஹமட் சமி மற்றும் புவ்னேஸ்வர் குமார் ஆகியோருடன் சேர்ந்து வேகப்பந்து வீச்சு துறைக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்தோடு, அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரின் போது, உபாதைக்கு உள்ளாகி தற்போது குணமடைந்து  வரும்  KL ராகுலும் இக்குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியை, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராத் கோ தலைமை தாங்குகின்றார்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியுடனான போட்டி விபரம்

இந்திய குழாம்

விராத் கோஹ்லி (அணித் தலைவர்), முரளி விஜய், KL ராகுல், செட்டெஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே (உப தலைவர்), ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, வித்திமன் சஹா, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, புவ்னேஸ்வர் குமார், மொஹமட் சமி, குல்தீப் யாதவ், அபினவ் முகுந்த்