ஒரு இன்னிங்ஸின் 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய இளம் பந்துவீச்சாளர்

270

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 18 வயதேயான இளம் பந்துவீச்சாளர் ஒருவர் கிரிக்கெட் போட்டி ஒன்றின் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுக்களையும் சாய்த்து வினோதமான சாதனை ஒன்றினை நிலைநாட்டியுள்ளார்.

ஆறாவது டெஸ்ட் போட்டியில் உலக சாதனையை சமன் செய்த ரிஷாப் பண்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான விக்கெட்…

இந்தியாவில் கனிஷ்ட வீரர்களுக்கான கோச் பீகார் கிண்ண கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த கிரிக்கெட் தொடரில் நேற்று (12) நடைபெற்ற போட்டியில் மணிப்பூர் அணிக்காக ஆடிய இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ரெக்ஸ் ராஜ்குமார் சிங் மூலமே அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றப்பட்டு இந்த வினோத சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

ராஜ்குமார் சிங் இந்த 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றுவதற்காக வெறும் 11 ஓட்டங்களை மட்டுமே எதிரணிக்கு விட்டு தந்திருந்ததுடன் வெறும் 9.5 ஓவர்களுக்குள்ளேயே 10 விக்கெட்டுக்களையும் எடுத்திருந்தார். ராஜ்குமார் சிங்கின் பந்துவீச்சுப் பெறுதியில் 6 ஓட்டமற்ற ஓவர்களும் அடங்கியிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

தனது 10 விக்கெட்டுக்களை ராஜ்குமார் சிங், 5 துடுப்பாட்ட வீரர்களை போல்ட் செய்தும், 2 துடுப்பாட்ட வீரர்களை LBW முறையில் ஆட்டமிழக்க செய்தும், 3 துடுப்பாட்ட வீரர்களை பிடியெடுப்பு செய்தும் கைப்பற்றியிருந்தார். இதோடு குறித்த 10 விக்கெட்டுக்களுக்குள் ஒரு ஹட்ரிக்கும் பெறப்பட்டிருந்தது.  

ராஜ்குமார் சிங்கின் அதிரடி பந்துவீச்சு காரணமாக அருணாச்சல பிரதேச அணி குறித்த இன்னிங்ஸில் வெறும் 36 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்ததோடு மணிப்பூர் அணியுடன் 10 விக்கெட்டுக்களால் தோல்வியினையும் தழுவியிருந்தது.

ராஞ்சி கிண்ண முதல்தர கிரிக்கெட் தொடரிலும் இந்த  பருவகாலத்தில் அறிமுகமாகியிருந்த ராஜ்குமார் சிங் அதில் 5/33 என்கிற சிறந்த பந்துவீச்சு பெறுதியோடு மொத்தமாக 15 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<