மேற்கிந்திய தீவுகளில் இருந்து நாடு திரும்பும் இந்திய கிரிக்கெட் அணி

28

பேரில் புயலில் (Beryl Hurricane) சிக்கியிருந்த இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி வெற்றிகரமாக நாடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.   

ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரினை ஜூன் 29ஆம் திகதி வெற்றி கொண்ட இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் ஏற்பட்ட பேரில் புயலில் சிக்கியதன் காரணமாக நாடு திரும்புவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தது.

>>நடப்புச் சம்பியனை இலகுவாக வீழ்த்திய கொழும்பு ஸ்ரைக்கர்ஸ்

இதனால் மேற்கிந்திய தீவுகளில் இரண்டு நாட்கள் வரை  இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், அவர்களின் குடும்பம் மற்றும் அணி பிரமுகர்கள் என அனைவரும் சிக்கித் தவித்த நிலையில் அவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு அதாவது இந்திய நேரப்படி இன்று காலை (03) நேரடி விமானம் மூலம் புது டெல்லி பயணமாகுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

புது டெல்லி பயணமாகியதன் பின்னர் அங்கே இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடியினை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

மறுமுனையில் T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியுன் விளையாடியிருந்த தென்னாபிரிக்க அணியின் வீரர்களும் நாடு திரும்புவதாக கூறப்பட்டிருக்கின்றது.

இதில் கேசவ் மஹராஜ், ஒட்னெயில் பார்ட்மன் மற்றும் லுன்கி ன்கிடி ஆகிய வீரர்களே தென்னாபிரிக்காவிற்குச் செல்லும் நிலையில் அவ்வணியின் ஏனைய வீரர்கள் லங்கா பிரீமியர் லீக்  (LPL) மற்றும் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) ஆகிய தொடர்களில் ஆட குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<