இந்தியாவைச் சேர்ந்த வாகன சாரதி ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து பயணக் கட்டணத்தை வாங்க மறுத்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது. இந்தநிலையில், கெப்பா மைதானத்தில் நடைபெறவிருந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர், பாகிஸ்தான் வீரர்கள் சிலர் அங்குள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு இரவுநேர உணவுக்காக செல்ல தீர்மானித்துள்ளனர்.
ஜொப்ரா ஆர்ச்சரிடம் மன்னிப்பு கோரவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட்
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ………..
இதன்போது, வீரர்கள் குறித்த உணவகத்துக்கு செல்வதற்காக வாகனம் ஒன்றை அழைத்துள்ளனர். குறித்த வாகனத்தின் சாரதியாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இருந்துள்ளதுடன், அவர் மிகப்பெரிய கிரிக்கெட் இரசிகராகவும் இருந்துள்ளார்.
இதன்போது, வீரர்களை ஹோட்டலில் இருந்து இந்திய உணவகம் வரை அழைத்துச் சென்ற குறித்த இந்திய வாகன சாரதி, பாகிஸ்தான் வீரர்களிடமிருந்து பயணத்துக்கான கட்டணத்தை வாங்க மறுத்துள்ளனர். பாகிஸ்தான் வீரர்களான சஹீன் ஷா அப்ரிடி, யசீர் ஷா மற்றும் நஷீம் ஷா உள்ளிட்ட சில வீரர்கள் குறித்த வாகனத்தில் இருந்துள்ளனர்.
குறித்த வீரர்கள் பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டபோதும், வாகன சாரதி இறுதிவரை பணத்தை வாங்க மறுத்துள்ளார். இதன் காரணமாக குறித்த வீரர்கள் அனைவரும் இணைந்து வாகன சாரதியை இரவு விருந்துக்கு அழைத்துள்ளனர்.
பின்னர், வீரர்களுடன் சென்று இரவு உணவை குறித்த இந்திய வாகன சாரதி எடுத்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, வீரர்களை அழைத்துச் சென்று, ஹோட்டலில் விட்டுச்சென்றுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே இடம்பெற்றுவரும் அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் குறித்த நாடுகளின் விளையாட்டுகளிலும் பெரிதும் தாக்கம் செலுத்துகின்றன. இவ்வாறான ஒரு நிலையில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தற்போது அதிகமானவர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் அடிப்படையில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<