கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்த இந்திய வீரரின் 360 பாகை பந்துவீச்சு

2631
Image Courtesy - BCCI TV (screenshot)

ஆரம்பத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒருநாள் போட்டிகளுக்கும், பின்னர் டி-20 போட்டிகளுக்கும் மாற்றம் பெற்ற கிரிக்கெட் யுகம் தற்போது டி-10 போட்டிகளாகவும் மாற்றம் கண்டுள்ளது.

அதேபோல, துடுப்பாட்டத்தை எடுத்துக்கொண்டால் ஏபி. டி. வில்லியர்ஸின் 360 பாகை துடுப்பாட்டம், டில்ஷானின் டில்ஸ் கூப் மற்றும் டோனியன் ஹெலிகப்டர் துடுப்பாட்டம் என்பவை கிரிக்கெட் உலகில் இன்னும் பேசப்படுகின்ற முக்கிய துடுப்பாட்ட பாணிகளாக அமைந்துள்ளன.

ஹபீஸின் விவகாரத்தில் டெய்லருக்கு எதிராக கொந்தளிக்கும் சர்ப்ராஸ்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் மொஹமட் ….

இதேநேரம், பந்துவீச்சில் தென்னாபிரிக்க வீரர் போல் அடெம்ஸ், மாலிங்கவின் யோக்கர் என்கின்ற சிலிங்கா பந்துவீச்சு, இந்திய வீரர்களான ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ஷிவில் கௌஷிக்கின் பந்துவீச்சு ஆகியன கிரிக்கெட் உலகில் இன்று வரை பேசப்படுகின்ற வித்தியாசமான பந்துவீச்சுப் பாணியாக விளங்குகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் சி.கே.நாயுடு கிண்ணத்துக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரில் உத்தர பிரதேச மாநில அணியைச் சேர்ந்த 19 வயதுடைய இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சிவா சிங், 360 பாகை சுற்றி வந்து வித்தியாசமான முறையில் பந்து வீசியது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. ஆனால், சிவா சிங் 360 பாகையில் சுற்றி பந்து வீசியதை நடுவர் முறையற்ற பந்து (டெட் போல்) என்று அறிவித்த விவகாரம் தற்போது பலத்த சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.  

23 வயதுக்குட்பட்டோருக்கான சி.கே.நாயுடு கிண்ண நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற குழு – 1 இற்கான போட்டியில் பெங்கால் மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் மோதிய போட்டியில்தான் சிவா சிங் வித்தியாசமான பந்துவீச்சு பாணியின் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை பெற்றுள்ளார்.

பலவாறு அலங்கரிக்கப்பட்ட காலி டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம்

குறித்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சிவா சிங் பந்துவீசும்போது 360 பாகையில் ஒருமுறை சுற்றி, தனது வழமையான பாணியில் இருந்து மாறுபட்டு, வித்தியாசமாகப் பந்துவீசினார். அதைத் தடுத்து ஆடிய துடுப்பாட்ட வீரரும் இது என்ன மாதிரியான பந்துவீச்சு என பார்த்துக்கொண்டிருக்க, இதை முறையற்ற பந்து (டெட் போல்) என கள நடுவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இது எப்படி டெட் போல் ஆகும் என அவரிடம் சிவா கேள்வியும் எழுப்பினார். நான் ஏற்கனவே இதேபோன்று வீசியுள்ளேன். அப்போது நடுவர்கள் டெட் போல் என்று அறிவிக்கவில்லை என்றார்.

இந்தப் பந்துவீச்சு குறித்து பிரபல கிரிக்கெட் இணையத்தளமான .எஸ்.பி.என் கிரிக் இன்போவுக்கு சிவா சிங் வழங்கிய செவ்வியில்,  நான் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வித்தியாசமான பாணியில் பந்துவீசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இந்தப் போட்டியிலும் இதைச் செய்யலாம் என நினைத்தேன், காரணம், அப்போது பெங்கால் வீரர்கள் சிறப்பாக விளையாடி இணைப்பாட்டமொன்றைப் பெற்று இருந்தனர். அதனால், அப்படி வீசினேன். ஆனால், நடுவர் அதை டெட் போல் என்று அறிவித்துவிட்டனர். அதனால் அவரிடம், இது குறித்துக் கேட்டேன் என தெரிவித்தார்.

ரோஹித் ஷர்மாவின் சாதனையுடன் டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ….

இதுஇவ்வாறிருக்க, இந்தியாவின் நடைபெற்றுவரும் பிரதான உள்ளூர் போட்டிகளில் ஒன்றான விஜய் ஹசாரே தொடரில் கேரள அணிக்கு எதிராகவும் இதேபோன்று பந்து வீசினேன். ஏன் துடுப்பாட்ட வீரர்கள் ஸ்விட்ச் ஹிட், ரிவெர்ஸ் ஸ்வீப் என பல்வேறு யுத்திகளைப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராகக் கையாளுகிறார்கள். பந்துவீச்சாளர்கள் அதுபோன்று செய்தால், டெட் போல் என்கிறார்கள் என விரக்தியுடன் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த வீடியோவை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிஷன் பெடி தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் இந்த பந்து ஐசிசி விதிமுறைப்படி நியாயமற்றதா? அல்லது துடுப்பாட்ட வீரரை ஏமாற்ற தந்திரத்திற்காக வீசப்பட்டதா? என்ற விவாதம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

அதுமாத்திரமின்றி, .சி.சியின் கிரிக்கெட் விதிகளின்படி, துடுப்பாட்ட வீரர்களின் கவனம் சிதறும் வகையிலோ அல்லது இடையூறு செய்யும் வகையிலேயே பந்து வீசினால் அந்த பந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<