நியூஸிலாந்து அணியுடன் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய இருபதுக்கு 20 அணியில் 19 வயதுடைய இந்திய வம்சாவளி வீரரான தன்வீர் சங்கா முதல்டவையாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதன்படி, அவுஸ்திரேலியா அணியில் இடம்பிடித்த இரண்டாவது இந்திய வம்சாவளி வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக 2015இல் குரிந்தர் சிங், இந்திய அணிக்கெதிராக மெல்பேர்னில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் 1-2 என தோல்வியைத் தழுவிய அவுஸ்திரேலிய அணி, அடுத்ததாக ஒரே சமயத்தில் தென்னாபிரிக்காவுக்கும், நியூஸிலாந்துக்கும் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.
லொக்குஹெட்டிகே குற்றம் செய்துள்ளமையை கண்டறிந்த ஐசிசி
இதில் நியூஸிலாந்து அணியுடன் 5 இருபதுக்கு 20 போட்டிகளிலும், தென்னாபிரிக்கா அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.
இதற்கான டிம் பெய்ன் தலைமையிலான டெஸ்ட் மற்றும் ஆரொன் பின்ச் தலைமையிலான இருபதுக்கு 20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் நியூஸிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய அணியில் பஞ்சாப்பின் ஜலந்தரைச் சேர்ந்த 19 வயது வீரர் தன்வீர் சங்கா இடம்பெற்றுள்ளார்.
தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் இருபதுக்கு 20 தொடர் லீக் சுற்று முடிவில் தன்வீர், 21 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.
இதன்படி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் அடம் ஜாம்பா (19), ரஷீத் கானை (16) பின்தள்ளி 21 விக்கெட்டுக்களை எடுத்து 3வது இடத்தைப் பெற்றுக்கொண்ட தன்வீர் சங்கா, முதல்தடவையாக அவுஸ்திரேலிய இருபதுக்கு 20 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Video – வேட்டையாடப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி | Cricket Galatta Epi 49
2020இல் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற இளையோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடி அதிக விக்கெட்டுக்களை எடுத்த தன்வீர் சங்காவின் தந்தை ஜோகா சங்கா பஞ்சாப்பின் ஜலந்தருக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர். அதேபோல, தன்வீர் சங்காவின் தாய் ஒரு கணக்காளராக சிட்னியில் வேலை பார்த்து வருகின்றார்.
சிறு வயதில் கரப்பந்தாட்டம் விளையாடிய தன்வீர், 1997இல் தனது தந்தையுடன் அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கு குடிபெயர்ந்தார். தற்போது அவரது தந்தை சிட்னியில் ‘TAXI’ டிரைவராக வேலை பார்க்கிறார்.
அவுஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்ன், இந்தியாவின் யுஸ்வேந்திர சஹால் ஆகிய இருவரதும் பந்துவீச்சைப் பார்த்து இவர் கிரிக்கெட்டில் வளர்ந்துள்ளார்.
18ஆம் திகதி சென்னையில் IPL ஏலம்: உரிமையாளர்களுக்கு 2 PCR பரிசோதனை
அதிலும் குறிப்பாக, இம்முறை பிக் பாஷ் தொடரில் ஆரொன் பின்ச், ஹேன்ஸ்கோம்ப், கிறிஸ் லின் உள்ளிட்டோரை ஆட்டமிழக்கச் செய்து அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்டார்.
எனவே தன்வீர் சங்கா எதிர்வரும் காலங்களில் அவுஸ்திரேலிய அணியின் அடுத்த சுழல் வீரராக வலம் வருவார் என நம்பப்படுகிறது.
இதனிடையே, தன்வீர் சங்காவுடன் சேர்த்து இன்னும் இரண்டு புதுமுக வீரர்கள் அவுஸ்திரேலிய இருபதுக்கு 20 அணியில் இடம்பெற்றுள்ளனர். இதில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பிலிப்பே மற்றும் ஹோபார்ட் ஹரிகென்ஸ் அணியின் வேகப் பந்தவீச்சாளர் ரிலி மிரிடிட் ஆகியோர் அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
நியூஸிலாந்துடனான T20 தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம்:
ஆரோன் பின்ச் (தலைவர்), அஸ்டன் அகார், ஜேசன் பெஹ்ரன்டோர்ப், மிட்செல் மார்ஷ், க்ளென் மெக்ஸ்வெல், பென் மெக்டர்மோட், ரிலி மிரிடிட், ஜோஸ் பிலிப்பே, கேன் றிச்சர்ட்ஸன், ஜை றிச்சர்ட்ஸன், டேனியல் சேம்ஸ், தன்வீர் சங்கா, டி ஆர்சி சேர்ர்ட், மார்கஸ் ஸ்டொய்னிஸ், அஸ்டன் டர்னர், அன்ட்ரூ டை. மெதிவ் வேட், அடெம் ஜம்பா
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<