இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்காரவின் கிரிக்கெட் வாழ்க்கையை பின்பற்ற விரும்புவதாகத் தெரிவித்த தென்னாபிரிக்க அணியின் புதுமுக வீரரான 25 வயதுடைய செனுரன் முத்துசாமி, கிரிக்கெட் அரங்கில் குமார் சங்கக்காரவுடன், ரங்கன ஹேரத்தையும் தான் அதிகம் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்திய – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகபட்டினத்தில் நேற்று (02) ஆரம்பமாகியது. இதில், தென்னாபிரிக்க அணி சார்பில் அறிமுக வீரராக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட துடுப்பாட்ட சகலதுறை வீரரான செனுரன் முத்துசாமி அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார்.
“த ஹன்ரட்” கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் லசித் மாலிங்க
அடுத்த ஆண்டின் (2020) நடுப்பகுதியில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள
இடதுகை சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான செனுரன் முத்துசாமி தென்னாபிரிக்க A அணியில் இடம்பெற்று தற்போது தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளார்.
இவர் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டாலும், சென்னையிலிருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள நாகப்பட்டினத்தில்தான் செனுரன் முத்துசாமி குடும்பத்தினர், உறவினர்கள் இன்னமும் வசிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் முத்துசாமியின் குடும்பத்தினர் சிலர் தென்னாபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்துவிட்டதால், அவர் தென்னாபிரிக்காவில்தான் பிறந்து வளர்ந்தார்.
இந்நிலையில், டெஸ்ட் போட்டி ஆரம்பமாவதற்கு முன் செனுரன் முத்துசாமி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
என்னுடைய பூர்வீகம் சென்னைதான். ஆனால் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் நாகப்பட்டினத்தில் இருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் என்னுடைய குடும்பத்தினர் தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்கு குடிபெயர்ந்துவிட்டார்கள்.
தென்னாபிரிக்காவில் பிறந்தாலும், இன்னும் நான் தமிழரைப் போன்றுதான் இருக்கிறேன். ஆனால் எனக்கு தமிழ் பேச தெரியாது. இந்தியா வந்தவுடன் என் தாய் வீட்டுக்கு வந்ததைப் போல நினைவு வருகிறது. இன்னும் இந்திய கலாச்சாரம், தமிழ் பாரம்பரியம் ஆகியவை எங்களை விட்டு அகலவில்லை.
தென்னாபிரிக்க அணிக்காக நான் தேர்வானபோது எனது பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதுவும் எனது அறிமுகப் போட்டி இந்தியாவுக்கு எதிரானது என்பது கூடுதல் சிறப்பம்சமாக அமைந்தது.
தென்னாபிரிக்காவின் டர்பனில் நிறைய இந்தியர்கள் வசிக்கிறார்கள். அங்கு நான் யோகா செய்வேன். நாங்கள் கோயில்களுக்குச் செல்வது வழக்கம். எனது குடும்பத்தினர் சிலர் தமிழில் அதிகம் பேசுவார்கள். துரதிஷ்டவசமாக, எனக்கு தமிழ் தெரியாது. தற்போதுதான் அதைப் படிக்க முயற்சி செய்து வருகிறேன்.
இந்தியாவின் காலநிலையை சிறப்பாக கையாள வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, ஆட்டத்தில் வெற்றி பெற சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அதிக நெருக்கடி இருக்கும்.
அதேசமயம், தொடர்ச்சியாக சிறப்பாகவும் பந்துவீச வேண்டும். தென்னாபிரிக்காவில் இது முற்றிலும் நேர்மாறானது. 4 ஆவது இன்னிங்ஸில்தான் நாங்கள் ஆட்டத்திலேயே பங்கெடுப்போம்.
துடுப்பாட்டத்தில் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இந்திய ஆடுகளங்களில் பந்துகள் அதிகளவில் பௌன்சர்கள் ஆகாது. அதற்கேற்றால் போல் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். ரிவர்ஸ் ஸ்விங்கையும் எதிர்கொள்ள வேண்டும். இந்திய ஆடுகளங்களில் நான் நிச்சயம் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
யாருடனும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஆடத் தயாராக உள்ள குனத்திலக்க
உபாதைக்குப் பிறகு இலங்கை அணியில் இடம்பிடித்து சதமடிக்க கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க
இதேநேரம், கிரிக்கெட் உலகில் குமார் சங்கக்காரவும், ரங்கன ஹேரத்தும் என்னை ஈர்த்துள்ளனர். குமார் சங்கக்காரவின் துடுப்பாட்டத்தைப் போன்று கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டு அவரை நிறைய பிடிக்கும். அவரை எப்போதுமே பின்தொடர்ந்து கொண்டுதான் இருப்பேன். இவர்கள் தவிர சகிப் அல் ஹசன், மொயின் அலி, பிஷன் பேடி ஆகியோரையும் மிகவும் பிடிக்கும். இதுதவிர நிறைய டி-20 கிரிக்கெட் விளையாடுவதும் எனக்கு பிடிக்கும் என்றார்.
துடுப்பாட்ட சராசரி, விக்கெட்
செனுரன் முத்துசாமியின் முதல்தர போட்டிகளில் துடுப்பாட்ட சராசரி 32.72 ஆகும். லிஸ்ட் A போட்டிகளில் 26.60 துடுப்பாட்ட சராசரியைக் கொண்டுள்ளார். அத்துடன், 69 முதல் தர போட்டிகளில் 129 விக்கெட்டுக்களையும், 52 லிஸ்ட் A போட்டிகளில் 48 விக்கெட்டுக்களையும் அவர் வீழ்த்தி உள்ளார். மேலும், முதல் தர கிரிக்கெட்டில் அவர் 3403 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
பயிற்சிப் போட்டி
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் அவருக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், ஒரே ஒரு ஓவர் தான் பந்துவீசும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதிலும் தனக்கு கிடைத்த ஒரே ஓவரில் விக்கெட் வீழ்த்தி தன் திறனை செனுரன் முத்துசாமி நிரூபித்துக் காட்டினார். இதன் பிரதிபலாக தென்னாப்பிரிக்க அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது.
முதல் விக்கெட்
விசாகப்பட்டினம் ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் ஆடுகளம். அதிலும், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான பிரதிபலனையும் அவர் பெற்றுக்கொண்டார்.
களத்தடுப்பு நாம் எதிர்பார்த்த தரத்தில் அமையவில்லை – சர்பராஸ் அஹ்மட்
கராச்சியில் நேற்று (2) இடம்பெற்று
போட்டியின் முதல் நாளான நேற்று (02) ஐந்து ஓவர்கள் பந்துவீசிய அவர் 23 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.
இந்த நிலையில், போட்டியின் 2 ஆவது நாளான இன்று அபாரமாக பந்துவீசிய அவர், விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தி தனது முதல் டெஸ்ட் விக்கெட்டைப் பெற்றுக் கொண்டார்.
இதன்படி, 15 ஓவர்களை வீசிய அவர் 63 ஒட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க