வீரர்களின் புகைப்படங்களை எரித்த இந்திய இரசிகர்கள்

1380

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (10) நிறைவுபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.  

இந்த உலகக் கிண்ணத் தொடரை பொருத்தவரை அதிக எதிர்பார்ப்பு மிக்க அணியாக விளங்கிய இந்திய அணி, துரதிஷ்டவசமான முறையில் நேற்றைய போட்டியில் தோல்வியை தழுவியது. அரையிறுதிப் போட்டியை பொருத்தவரை ஆரம்பத்தில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த இந்திய அணி, ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திரசிங் டோனி ஆகியோரின் சிறப்பான ஆட்டங்களால் முன்னேறியது.

எங்களது துடுப்பாட்டத்தின் முதல் 40 நிமிடங்கள் போட்டியை மாற்றியது – கோஹ்லி

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான…….

ஆனால், நியூசிலாந்து அணி இறுதி தருணங்களில் இந்திய அணியை கட்டுப்படுத்தியதுடன், மார்ட்டின் கப்டிலின் அபாரமான களத்தடுப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மகேந்திரசிங் டோனியுடைய ரன்-அவுட் மூலமான ஆட்டமிழப்பு இந்திய அணியின் இறுதிப் போட்டி கனவை களைத்திருந்தது.

இந்திய அணியுடைய இந்தத் தோல்வியானது இந்திய இரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை வழங்கியிருந்தது. உலகக் கிண்ணத்தில் அதி உச்ச எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருந்த தங்களுடைய அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத இந்திய இரசிகர்கள் சிலர் வீரர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதுமாத்திரமின்றி இந்திய அணியின், கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை தீயிட்டு கொழுத்தியுமுள்ளனர். 

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிமான இரசிகர் பட்டாளம் உள்ளது. இந்தியாவிலும் சரி அல்லது ஏனைய நாடுகளை பார்க்கும் போதும், இந்திய அணியின் வெற்றியை கொண்டாடும் இரசிகர்கள் மிக அதிகம். இந்த உலகக் கிண்ணத் தொடரிலும் இந்திய அணியின் ஒவ்வொரு போட்டிகளிலும் ஏராளமான இரசிகர்களை பார்க்க முடிந்தது.

ஒருவருட போட்டித் தடைக்கு முகங்கொடுத்துள்ள ஆப்கான் வீரர்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து ……

கிரிக்கெட்டுடன் அதிக ஈடுபாடுகளை கொண்ட இந்திய இரசிகர்கள் தங்களது ஆதரவை அதிகமாக வழங்கும் அதே நேரத்தில், இவ்வாறான எதிர்ப்புகளை வழங்கியும் வருகின்றனர். 1996ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் வைத்து இந்திய இரசிகர்கள் மைதானத்தில் ஏற்படுத்திய அமைதியின்மையால், போட்டியின் வெற்றி இலங்கை அணிக்கு வழங்கப்பட்டிருந்தமை நாம் அறிந்ததே.   

எவ்வாறாயினும், இப்போதுள்ள இரசிகர்களை பொருத்தவரை இந்திய அணி தோல்வியடைந்தாலும், அணி சிறந்த போட்டியை வழங்கி தோல்வியடைந்ததை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், போட்டியொன்றில் வெற்றி தோல்வி சாதாரணமானது என்பதனை உணர்ந்துள்ளனர். இதனை சமுகவலைத்தளங்களில் இந்திய இரசிகர்கள் பகிரும் கருத்துகளின் ஊடாக அறிய முடிகின்றது. இந்நிலையில், சில இந்திய கிரிக்கெட் இரசிகர்களால் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற செயற்பாடுகள் அனைவர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<