4000 கோடி நஷ்டத்தை சந்திக்குமா BCCI??

139

இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகள் நடைபெறாது போனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (BCCI), கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபா நஷ்டத்துக்கு முகம்கொடுக்க நேரிடும் என அதன் பொருளாளர் அருண் துமால் தெரிவித்திருக்கின்றார்.  

பும்ராவுக்கு வசீம் அக்ரமின் அறிவுரை

இந்திய கிரிக்கெட் அணியின் ஜஸ்பிரிட் பும்ரா …………

கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகில் நடைபெற்ற அனைத்து விளையாட்டுக்களையும் இரத்துச் செய்ய வைத்தது. இதற்கு கிரிக்கெட்டும் விதிவிலக்கு அல்ல. கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாத காரணத்தினால், பல நாடுகளின் கிரிக்கெட் சபைகள் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன. 

இந்த நிலையிலேயே இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை சுகாதார அறிவுரைகள் கருதி இதுவரை நடாத்தாமல் இருக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஒன்றை சந்திக்கவிருக்கின்றது. 

”எங்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகும் போதே, எவ்வளவு இழப்பு ஏற்படுகின்றது என்பதை கணிக்க முடியும். இப்போதைக்கு நடைபெறாமல் போகும் ஒவ்வொரு இருதரப்பு தொடர்களுக்கும் நாம் பணத்தினை இழக்கின்றோம். (இந்த ஆண்டு) ஐ.பி.எல். போட்டிகளை நாம் ஒழுங்கு செய்யாது போனால் மிகப் பெரிய நெருக்கடி ஒன்றை சந்திக்க நேரிடும். 

அதன்படி, ஐ.பி.எல். போட்டிகளை நடாத்தாவிட்டால் நாம் இந்திய நாணயப்படி கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய்களை (இலங்கை நாணயப்படி கிட்டத்தட்ட 9500 கோடி ரூபாய்)  இழக்க நேரிடும்.” என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பொருளாளர் அருண் துமால் தெரிவித்திருக்கின்றார். 

தடைக்கு உள்ளாகியுள்ள உமர் அக்மல் மீது புதிய குற்றச்சாட்டு

சூதாட்டத் தரகர்கள் என சந்தேகிக்கப்படும்……..

இதேநேரம் அருண் துமால், தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் கிரிக்கெட் சபைகள் ஐ.சி.சி. இன் கிரிக்கெட் தொடர்களைத் தவிர்த்து நாடுகளுக்கிடையிலான இருதரப்பு தொடர்களில் அதிகம் விளையாட கவனம் செலுத்தினால் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்கு இலகுவாக இருக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். 

”ஆம், (இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது) கிரிக்கெட் சபைகளுக்கு இலகுவான முறையில் பணத்தினைப் பெற்றுத்தரும். அதனாலேயே எது சிறப்பானது என்பதைப் பார்க்க, அனைவரும் கிரிக்கெட் சபைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஒவ்வொரு கிரிக்கெட் சபைகளும் உயிர்ப்புடன் இருந்தால் தானே ஐ.சி.சி. உம் இயங்க முடியும். உண்மை அதுதானே?? 

ஐ.சி.சி. தனியாக செயற்பட்டு அனைத்து கிரிக்கெட் சபைகளையும் பாதுகாக்கும் என்பது பொய்யான விடயமாகும். எங்களுக்கு சொந்தக்காலில் நிற்க முடியும் என்னும் போதே மற்றவர்களுக்கு உதவ முடியும். இதற்காகவே அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இதேநேரம், கிரிக்கெட் போட்டிகள் (மீண்டும்) ஆரம்பிக்க வேண்டும் என்றால் கிரிக்கெட் சபைகள் பொருளாதார ரீதியாக உயிர்ப்புடன் இருக்க வேண்டும்.” என்றார். 

அதேநேரம், இந்திய கிரிக்கெட் சபை தமது பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபட இரண்டு இந்திய அணிகளை உருவாக்கி ஒரே நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வைக்க திட்டங்கள் தீட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பிலும், பதில் தந்த அருண் துமால் அது பொய்யான விடயம் எனக் கூறியிருந்தார்.  

”இது ஊடகங்கள் பரப்பும் வதந்திகளே, இப்படி எதனையும் நாங்கள் இன்னும் எண்ணியிருக்கவில்லை. எங்காவது (கிரிக்கெட் போட்டிகளுக்காக) எமது அணியினை அனுப்ப விரும்பினால், நாங்கள் எங்களிடம் இருக்கும் சிறந்த அணியினையே அனுப்புவோம்.”

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அருண் துமால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, கிரிக்கெட் போட்டிகளினை இந்தியாவில் மீளக் கொண்டுவருவதற்கும், பொருளாதார விடயங்களில் முன்னேறுவதற்கும் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்துவருவதாக சுட்டிக்காட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<