சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவதும், இறுதியுமான T20I போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இந்திய அணி தொடரை ஏற்கனவே 2-0 என கைப்பற்றியிருந்த நிலையில், மூன்றாவது T20I போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
>> ரோஹித் சர்மாவிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று
அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைக்காவிட்டாலும், மத்திய வரிசையில் களமிறங்கிய அணித்தலைவி ஹர்மன்பிரீட் கவுர் மற்றும் ஜெமிமா ரொட்ரிகஸ் ஆகியோர் சிறந்த முறையில் ஓட்டங்களை குவித்தனர்.
இவர்களின் பங்களிப்புக்களின் உதவியுடன் இறுதி ஓவர்களில் இந்திய மகளிர் அணி வேகமாக ஓட்டங்களை குவிக்க, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
ஹர்மன்பிரீட் கவுர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஜெமிமா ரொட்ரிகஸ் 33 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இலங்கை அணியின் பந்துவீச்சில் ஓசதி ரணசிங்க 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு விஷ்மி குணரத்ன வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்க முற்பட்டபோதும், முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். பின்னர் ஹர்சிதா மாதவி, சமரி அதபத்துவுடன் இணைந்து 31 ஓட்டங்களை பகிர்ந்து ஆட்டமிழக்க, நிலக்ஷி டி சில்வா மற்றும் சமரி அதபத்து ஆகியோர் இணைந்து மிகச்சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர்.
இவர்கள் இருவரும் 83 ஓட்டங்களை பகிர்ந்து, T20I கிரிக்கெட்டில் இலங்கை மகளிர் அணிக்கான அதிகூடிய மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டத்தை பதிவுசெய்தனர். இதில், சமரி அதபத்து அரைச்சதத்தை கடந்தது மாத்திரமின்றி, இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டை பொருத்தவரை T20I கிரிக்கெட்டில் 2000 ஓட்டங்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை பதிவுசெய்துக்கொண்டார்.
இலங்கை கிரிக்கெட்டை பொருத்தவரை T20I கிரிக்கெட்டில் இதுவரையில் திலகரட்ன டில்ஷான் 1889 ஓட்டங்கள், குசல் பெரேரா 1539 ஓட்டங்கள், மஹேல ஜயவர்தன 1493 ஓட்டங்கள் மற்றும் குமார் சங்கக்கார 1382 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.
குறிப்பிட்ட இந்த மிகச்சிறந்த வீரர்கள் வரிசையில் சமரி அதபத்து 2000 ஓட்டங்களை குவித்து இலங்கை கிரிக்கெட்டில் புதிய சாதனையை பதிவுசெய்துள்ளார். இவர் இந்தப்போட்டியில் 29 பந்துகளில் இலங்கை அணிக்காக வேகமான அரைச்சதத்தை பதிவுசெய்ததுடன், 48 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 14 பௌண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களை குவித்தார். அத்துடன், இவர் 95 இன்னிங்ஸ்களில் 2054 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
சமரி அதபத்துவின் இந்த சாதனை மற்றும் நிலக்ஷி டி சில்வாவின் 30 ஓட்டங்களின் உதவியுடன் இலங்கை மகளிர் அணி வெறும் 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அதேநேரம், இந்திய அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் முதல் T20I வெற்றியையும் இலங்கை அணி இன்றைய தினம் பதிவுசெய்துக்கொண்டது.
எவ்வாறாயினும் இந்த T20I தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் முதலாம் திகதி கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Smriti Mandhana | c Nilakshi de Silva b Oshadi Ranasinghe | 22 | 21 | 3 | 0 | 104.76 |
Shafali Verma | c Chamari Athapaththu b Sugandika Kumari | 5 | 4 | 1 | 0 | 125.00 |
sabbhineni meghana | c Chamari Athapaththu b Inoka Ranaweera | 22 | 26 | 3 | 0 | 84.62 |
Harmanpreet Kaur | not out | 39 | 33 | 3 | 1 | 118.18 |
Jemimah Rodrigues | c Vishmi Gunaratne b Ama Kanchana | 33 | 30 | 3 | 0 | 110.00 |
Pooja Vastrakar | run out () | 13 | 16 | 2 | 0 | 81.25 |
Extras | 4 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 0) |
Total | 138/5 (20 Overs, RR: 6.9) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sugandika Kumari | 4 | 0 | 28 | 1 | 7.00 | |
Ama Kanchana | 4 | 0 | 22 | 1 | 5.50 | |
Oshadi Ranasinghe | 3 | 0 | 13 | 1 | 4.33 | |
Inoka Ranaweera | 4 | 0 | 31 | 1 | 7.75 | |
Kavisha Dilhari | 3 | 0 | 22 | 0 | 7.33 | |
Chamari Athapaththu | 2 | 0 | 21 | 0 | 10.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Vishmi Gunaratne | c Harmanpreet Kaur b Renuka Singh | 5 | 5 | 1 | 0 | 100.00 |
Chamari Athapaththu | not out | 80 | 48 | 14 | 1 | 166.67 |
Harshitha Samarawickrama | c Smriti Mandhana b Radha Yadav | 13 | 14 | 2 | 0 | 92.86 |
Nilakshi de Silva | run out () | 30 | 28 | 4 | 0 | 107.14 |
Kavisha Dilhari | not out | 7 | 7 | 0 | 0 | 100.00 |
Extras | 6 (b 1 , lb 0 , nb 0, w 5, pen 0) |
Total | 141/3 (17 Overs, RR: 8.29) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Renuka Singh | 4 | 0 | 27 | 1 | 6.75 | |
Deepti Sharma | 3 | 0 | 26 | 0 | 8.67 | |
Radha Yadav | 4 | 0 | 41 | 1 | 10.25 | |
Pooja Vastrakar | 1 | 0 | 9 | 0 | 9.00 | |
Harmanpreet Kaur | 2 | 0 | 13 | 0 | 6.50 | |
Simran Bahadur | 2 | 0 | 20 | 0 | 10.00 | |
Shafali Verma | 1 | 0 | 4 | 0 | 4.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<