ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மாவின் சாதனை இணைப்பாட்டம், ரேணுகா சிங்கின் அபார பந்துவீச்சின் மூலம் இலங்கை மகளிர் அணியுடனான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 0 என இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.
இந்திய மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற T20 தொடரை 2-1 என வென்ற இந்திய மகளிர் அணி, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (04) நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை மகளிர் அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான ஹசினி பெரேரா ஓட்டமின்றியும், விஷ்மி குணரட்ன 3 ஓட்டங்களுடனும் ரேனுகா சிங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அடுத்து களமிறங்கிய ஹர்ஷித்தா சமரவிக்ரம ஓட்டமின்றி ரேனுகா சிங் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். பின்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவி சமரி அத்தபத்து (27 ஓட்டங்கள்), அனுஷ்கா சஞ்சீவனி (25 ஓட்டங்கள்), நிலக்ஷி டி சில்வா (32 ஓட்டங்கள்) என சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமா காஞ்சனா 47 ஓட்டங்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா, மேக்னா சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
- ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
- அமெரிக்க மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சந்தர்போல்
- LPL தொடரின் வீரர்கள் வரைவுக்கான திகதி அறிவிப்பு!
இதனையடுத்து 174 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனாவும் ஷபாலி வர்மாவும் ஆரம்பம் முதல் இலங்கைப் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார்கள். 10 ஓவர்களில் 55 ஓட்டங்களையும், 20 ஓவர்களில் 113 ஓட்டங்களையும் எடுத்து வலுவான இணைப்பாட்டத்தை வழங்கினார்கள்.
இதில் மந்தனா 56 பந்துகளிலும், ஷபாலி வர்மா 57 பந்துகளிலும் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார்கள். இது ஒருநாள் போட்டிகளில் மந்தனாவின் 23ஆவது அரைச் சதமாகவும், ஷபாலி வர்மாவின் 4ஆவது அரைச் சதமாகவும் பதிவாகியது.
இதன்படி, இவர்களது சத இணைப்பாட்டத்தின் மூலம் இந்திய அணி 25.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 174 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றதோடு ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
இதில் மந்தனா 94 ஓட்டங்களையும், ஷபாலி 71 ஓட்டங்களையும் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இலங்கைக்கு எதிராக எந்தவொரு விக்கெட்டிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய ஜோடி என்ற பெருமையை இருவரும் பெற்றார்கள்.
மேலும், மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் எந்தவொரு அணியும் விக்கெட் இழப்பின்றி விரட்டிய அதிகபட்ச வெற்றி இலக்காகவும் இது பதிவானது.
இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Hasini Perera | b Renuka Singh | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Chamari Athapaththu | c Shafali Verma b Meghna Singh | 27 | 45 | 3 | 0 | 60.00 |
Vishmi Gunaratne | b Renuka Singh | 3 | 14 | 0 | 0 | 21.43 |
Harshitha Samarawickrama | lbw b Renuka Singh | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Anushka Sanjeewani | run out (Yastika Bhatia) | 25 | 44 | 2 | 0 | 56.82 |
Nilakshi de Silva | c Deepti Sharma b Meghna Singh | 32 | 62 | 3 | 0 | 51.61 |
Kavisha Dilhari | run out (Yastika Bhatia) | 5 | 7 | 1 | 0 | 71.43 |
Ama Kanchana | not out | 47 | 83 | 2 | 0 | 56.63 |
Oshadi Ranasinghe | c Deepti Sharma b Renuka Singh | 10 | 19 | 0 | 0 | 52.63 |
Inoka Ranaweera | st Yastika Bhatia b Deepti Sharma | 6 | 18 | 0 | 0 | 33.33 |
Achini Kulasuriya | c Harleen Deol b Deepti Sharma | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 18 (b 2 , lb 6 , nb 0, w 10, pen 0) |
Total | 173/10 (50 Overs, RR: 3.46) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Renuka Singh | 10 | 1 | 28 | 4 | 2.80 | |
Meghna Singh | 10 | 0 | 43 | 2 | 4.30 | |
Pooja Vastrakar | 4 | 0 | 15 | 0 | 3.75 | |
Rajeshwari Gayakwad | 10 | 2 | 24 | 0 | 2.40 | |
Deepti Sharma | 10 | 0 | 30 | 2 | 3.00 | |
Harleen Deol | 3 | 0 | 13 | 0 | 4.33 | |
Harmanpreet Kaur | 3 | 0 | 12 | 0 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Shafali Verma | not out | 71 | 71 | 4 | 1 | 100.00 |
Smriti Mandhana | not out | 94 | 83 | 11 | 1 | 113.25 |
Extras | 9 (b 0 , lb 0 , nb 0, w 9, pen 0) |
Total | 174/0 (26 Overs, RR: 6.69) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Achini Kulasuriya | 5 | 0 | 24 | 0 | 4.80 | |
Oshadi Ranasinghe | 5 | 0 | 36 | 0 | 7.20 | |
Ama Kanchana | 4 | 0 | 33 | 0 | 8.25 | |
Inoka Ranaweera | 6 | 0 | 42 | 0 | 7.00 | |
Kavisha Dilhari | 3 | 0 | 18 | 0 | 6.00 | |
Chamari Athapaththu | 3 | 11 | 21 | 0 | 7.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<