சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
ஆஸி.யின் சுழல் பந்துவீச்சில் சரிந்த இலங்கைக்கு படுதோல்வி!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, T20I தொடரினை அடுத்து ஒருநாள் தொடரில் ஆடி வருகின்றது
இந்த நிலையில் ஒருநாள் தொடரின் போட்டி இன்று (01) கண்டியில் ஆரம்பமாகியது.
தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினர் 48.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 171 ஓட்டங்கள் எடுத்தனர்.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் நிலக்ஷி டி சில்வா 43 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீராங்கனையாக மாற, ஹசினி பெரேரா 37 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் ரேனுகா சிங் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 172 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, போட்டியின் வெற்றி இலக்கினை 38 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களுடன் அடைந்தது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த அதன் தலைவி ஹர்மன்பிரீத் கவுர் 44 ஓட்டங்களை எடுத்தும் சபாலி வெர்மா 35 ஓட்டங்கள் எடுத்தும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் இனோக்கா ரணவீர 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Hasini Perera | lbw b Deepti Sharma | 37 | 53 | 5 | 0 | 69.81 |
Chamari Athapaththu | c Taniya Bhatia b Renuka Singh | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Hansima Karunaratne | c Pooja Vastrakar b Deepti Sharma | 0 | 11 | 0 | 0 | 0.00 |
Harshitha Samarawickrama | lbw b Pooja Vastrakar | 28 | 54 | 3 | 0 | 51.85 |
Kavisha Dilhari | c Shafali Verma b Harmanpreet Kaur | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Nilakshi de Silva | lbw b Renuka Singh | 43 | 63 | 4 | 0 | 68.25 |
Anushka Sanjeewani | c Yastika Bhatia b Rajeshwari Gayakwad | 18 | 48 | 0 | 0 | 37.50 |
Oshadi Ranasinghe | b Renuka Singh | 8 | 14 | 1 | 0 | 57.14 |
Rashmi de Silva | b Deepti Sharma | 7 | 21 | 0 | 0 | 33.33 |
Inoka Ranaweera | c Yastika Bhatia b Pooja Vastrakar | 12 | 15 | 2 | 0 | 80.00 |
Achini Kulasuriya | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 16 (b 4 , lb 3 , nb 0, w 9, pen 0) |
Total | 171/10 (48.2 Overs, RR: 3.54) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Renuka Singh | 6 | 0 | 29 | 3 | 4.83 | |
Meghna Singh | 8 | 0 | 23 | 0 | 2.88 | |
Deepti Sharma | 8.2 | 1 | 25 | 3 | 3.05 | |
Rajeshwari Gayakwad | 9 | 0 | 33 | 1 | 3.67 | |
Harmanpreet Kaur | 7 | 1 | 13 | 1 | 1.86 | |
Pooja Vastrakar | 5 | 0 | 26 | 2 | 5.20 | |
Harleen Deol | 3 | 0 | 11 | 0 | 3.67 | |
Shafali Verma | 2 | 0 | 4 | 0 | 2.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Smriti Mandhana | b Oshadi Ranasinghe | 4 | 7 | 1 | 0 | 57.14 |
Yastika Bhatia | b Oshadi Ranasinghe | 1 | 8 | 0 | 0 | 12.50 |
Shafali Verma | st Anushka Sanjeewani b Inoka Ranaweera | 35 | 40 | 1 | 2 | 87.50 |
Harmanpreet Kaur | lbw b Inoka Ranaweera | 44 | 63 | 3 | 0 | 69.84 |
Harleen Deol | lbw b Inoka Ranaweera | 34 | 40 | 2 | 0 | 85.00 |
Deepti Sharma | b | 22 | 41 | 0 | 0 | 53.66 |
Richa Ghosh | c Anushka Sanjeewani b Inoka Ranaweera | 6 | 11 | 0 | 0 | 54.55 |
Pooja Vastrakar | b | 21 | 19 | 2 | 0 | 110.53 |
Extras | 9 (b 0 , lb 2 , nb 1, w 6, pen 0) |
Total | 176/6 (38 Overs, RR: 4.63) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Achini Kulasuriya | 6 | 0 | 34 | 0 | 5.67 | |
Oshadi Ranasinghe | 8 | 1 | 34 | 2 | 4.25 | |
Inoka Ranaweera | 10 | 0 | 39 | 4 | 3.90 | |
Kavisha Dilhari | 7 | 0 | 33 | 0 | 4.71 | |
Rashmi de Silva | 6 | 0 | 30 | 0 | 5.00 | |
Chamari Athapaththu | 1 | 0 | 4 | 0 | 4.00 |
முடிவு – இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<