இலங்கை – இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது!

India women's tour of Sri Lanka 2022

239

இலங்கை மகளிர் அணி மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மகளிர் அணியானது, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

முதல் ஒருநாள் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

அதன்படி தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இம்மாதம் 18ம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதுடன், தொடர் எதிர்வரும் 23ம் திகதி தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

T20I தொடருடன் இந்த போட்டித்தொடர் ஆரம்பிக்கவுள்ளதுடன், அடுத்து நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகள் எதிர்வரும் 7ம் திகதி நிறைவுக்கு வருகின்றன. T20I போட்டிகள் அனைத்தும் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், ஒருநாள் போட்டிகள் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

போட்டி அட்டவணை

  • முதல் T20I போட்டி – ஜூன் 23 – தம்புள்ள
  • 2வது T20I போட்டி – ஜூன் 25 – தம்புள்ள
  • 3வது T20I போட்டி – ஜூன் 27 – தம்புள்ள
  • முதல் ஒருநாள் போட்டி – ஜூலை 1 – பல்லேகலை
  • 2வது ஒருநாள் போட்டி – ஜூலை 4 – பல்லேகலை
  • 3வது ஒருநாள் போட்டி – ஜூலை 7 – பல்லேகலை

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<