உலகில் நான்காவது தர நிலையில் இருக்கும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை மகளிர் அணியுடன் மூன்று ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஐந்து T20 சர்வதேச போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக செப்டம்பர் மாதம் இலங்கை வரவிருக்கின்றது.
செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டு மகளிர் அணிகளுக்கும் இடையிலான இத்தொடர், இரண்டு வாரங்கள் நடைபெற்று செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஆகியவை கடைசியாக, ஜூன் மாதம் இடம்பெற்றிருந்த ஆசியக் கிண்ணத் தொடரின் போட்டியொன்றில் கடைசியாக சந்தித்திருந்ததோடு அதில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் இலங்கையை வீழ்த்தியிருந்தது. இதேநேரம், குறித்த ஆசியக் கிண்ணத்தின் போட்டியே இரண்டு அணிகளும் கடைசியாக பங்குகொண்ட இறுதி சர்வதேச போட்டியாகாவும் இருந்தது.
போராடி வெற்றியை தவறவிட்ட இலங்கை உடல் அங்க குறைப்பாடு உள்ளோர் அணி
இலங்கை மற்றும் இந்திய உடல் அங்க குறைப்பாடு உள்ளோர் அணிகளுக்கிடையில் கொழும்பு…
ஆசியக் கிண்ணத்தின் பின்னர் இரண்டு மகளிர் அணிகளிலும் மாற்றங்கள் சில ஏற்பட்டுள்ளன. அத்தோடு இரண்டு அணிகளும் புதிய பயிற்றுவிப்பாளர்களையும் பெற்றிருக்கின்றன. அந்த வகையில், இந்திய மகளிர் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளதோடு, இலங்கை மகளிர் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஹர்ஷ டி சில்வா மீண்டும் பதவியேற்றிருக்கின்றார்.
இலங்கை மகளிர் அணி சர்வதேச போட்டிகளில் அண்மைய காலங்களில் சிறப்பான பதிவுகள் எதனையும் காட்டாத காரணத்தினால், இந்திய மகளிர் அணியுடனான தொடரில் நல்ல பெறுபேறு ஒன்றினை பெற கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுமுனையில், பங்களாதேஷ் மகளிர் அணியிடம் ஆசியக் கிண்ணத்தை பறிகொடுத்த இந்திய மகளிர் அணி உலகக் கிண்ண சம்பியன்களான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியை தமது சொந்த மண்ணில் வைத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் கடந்த ஏப்ரல் மாதம் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மகளிர் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தில் நடைபெறவுள்ள ஒரு நாள் தொடர், ஐ.சி.சி இன் மகளிர் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக அமையவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மகளிர் அணியின் இலங்கை சுற்றுத் தொடர் அட்டவணை
செப்டம்பர் 11 – முதலாவது ஒரு நாள் போட்டி, காலி சர்வதேச மைதானம்
செப்டம்பர் 13 – இரண்டாவது ஒரு நாள் போட்டி, காலி சர்வதேச மைதானம்
செப்டம்பர் 16 – சிலாபம் மேரியன்ஸ் மைதானம், கட்டுநாயக்க
செப்டம்பர் 19 – முதலாவது T20 போட்டி, சிலாபம் மேரியன்ஸ் மைதானம், கட்டுநாயக்க
செப்டம்பர் 21 – இரண்டாவது T20 போட்டி, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானம், கொழும்பு
செப்டம்பர் 22 – மூன்றாவது T20 போட்டி, கொழும்பு கிரிக்கெட் கழக மைதானம்
செப்டம்பர் 24 – நான்காவது T20 போட்டி, கொழும்பு கிரிக்கெட் கழக மைதானம்
செப்டம்பர் 25 – ஐந்தாவது T20 போட்டி, சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழக மைதானம், கட்டுநாயக்க
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க